உள்ளடக்கத்துக்குச் செல்

உத்கல் சம்மிலானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதகல் சம்மிலானி ( Utkal Sammilani ) என்பது ஒரு இந்திய சமூக மற்றும் கலாச்சார அமைப்பாகும். இது ஒடிசாவில் 1903 இல் மதுசூதன் தாசு என்பவரால் நிறுவப்பட்டது. தற்போதும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கிறது. [1]

வரலாறு[தொகு]

உத்கல் சம்மிலானி மதுசூதன் தாசு என்பவரால் நிறுவப்பட்டது. [2] 62 "நிரந்தர உறுப்பினர்களை" உள்ளடக்கிய இதன் முதல் கூட்டம் 1903 இல் நடைபெற்றது. [3] ஒடிசா மாநிலத்தை ஒன்றிணைக்கும் பிரச்சாரமே இந்த அமைப்பின் முதல் நோக்கமாகும். [4]

1920 இல் சக்ரதர்பூரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் சேர அமைப்பு முடிவு செய்தது. [5] 2002 இல் வசந்தகுமார் பாணிகிரகி என்பவர் இதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6]

2010 ஆம் ஆண்டில், உத்கல் சம்மிலானி, ஒடியாவிற்கு "செம்மொழி அந்தஸ்து" வழங்க வேண்டும் என்றும், ஒடியா மொழி பேசும் ஆனால் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது. [7] உத்கல் சம்மிலானி ஒடிசா மாநிலத்தை அதன் நவீனகால நிலைக்கு ஒடிசாவாக மாற்றியதில் முக்கியப் பங்காற்றியது. [8] 2010 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தின் போலவரம் திட்டத்தை எதிர்த்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff Reporter (24 October 2009). "Central Nod to Rename Orissa Welcome". Hindustan Times (New Delhi). {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "Death Anniversary of Utkal Gaurab Madhusudan Das" (PDF). Odisha Government. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  3. Makers of Modern Orissa.
  4. Indian Political Thought. PHI Learning Private Ltd.
  5. My Life, My work. Allied Publishers Private.
  6. "New Leader of Utkal Sammilani". Orrisa Matters. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  7. Staff Reporter (7 December 2010). "Utkal Sammilani's demand". The Hindu. 
  8. "Protest Against". The Hindu. 15 September 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்கல்_சம்மிலானி&oldid=3817765" இலிருந்து மீள்விக்கப்பட்டது