உத்கல் காங்கிரசு
| உத்கல் காங்கிரசு | |
|---|---|
| சுருக்கக்குறி | UC |
| தொடக்கம் | 1969 |
| கலைப்பு | 1974 |
| இணைந்தது | பிரகதி சட்டமன்றக் கட்சி பாரதிய லோக் தளம் |
| இ.தே.ஆ நிலை | Dissolved |
| இந்தியா அரசியல் | |
உத்கல் காங்கிரசு (Utkal Congress) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள ஓர் மாநில அரசியல் கட்சி ஆகும். 1969ஆம் ஆண்டில் பிஜு பட்நாயக் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினை விட்டு வெளியேறியபோது இக்கட்சி உருவாக்கப்பட்டது. 1971 ஒடிசா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு உத்கல் காங்கிரசு ஒடிசா மாநிலத்தில் பிசுவநாத் தாசு அமைச்சரவையில் பங்கேற்றது. 1974இல் உத்கல் காங்கிரஸ் பிரகதி சட்டமன்றக் கட்சி இணைந்தது. இது இறுதியில் பாரதிய லோக் தளத்துடன் இணைந்தது.
பின்னணி
[தொகு]ஒடிசா சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. இருப்பினும், உட்கட்சி பூசல் அதிகமாக இருந்தது. 1967இல் அரேகிருஷ்ணா மகதாப் தலைமையிலான காங்கிரசு அதிருப்தியாளர்கள் குழுவாகப் பிரிந்து ஜன காங்கிரசை உருவாக்கியது. 1967 பொதுத் தேர்தலில், காங்கிரசின் பெரும்பாலான தலைவர்கள் தோல்வியடைந்தனர். 1969இல் இந்திய தேசிய காங்கிரசு தேசிய அளவில் காங்கிரசு (ஓ) மற்றும் இந்திரா காங்கிரசு எனப் பிளவுப்பட்டது. ஆர். பிஜு பட்நாயக் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் தொடர்ந்து இருந்தார். இருப்பினும், 1970 மாநிலங்களவை தேர்தல்களில் மாநில பிரிவு மத்திய தலைமைக்கு பதிலாக வேறு வேட்பாளரை முன்மொழிந்தது. எனினும், தேர்தலில் இரண்டு வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். இதனால் பிஜு பட்நாயக் தலைமையிலான குழு மத்திய தலைமையிலிருந்து அனைத்து உறவுகளையும் துண்டித்தது. ஆரம்பத்தில் உத்கல் பிரதேச காங்கிரசு என்று பெயரிடப்பட்ட இந்தக் குழு, இறுதியில் உத்கல் காங்கிரசு என ஆனது. தங்கள் பெயராக பிஜு பட்நாயக், ரபி ரே ஆகியோருடன் ஒடிசாவின் இரண்டு முன்னாள் முதலமைச்சர்களான ஹரேகிருஷ்ணா மகதாப், சத்யுக்தா சோசலிச கட்சியின் ஆதரவைப் பெற்றது. இதன் மாநில அலகு 1972இல் உத்கல் காங்கிரசுடன் இணைந்தது.[1][2]
தேர்தல் வரலாறு
[தொகு]பிஜு பட்நாயக் காங்கிரசில் இருந்து ஏப்ரல் 6,1970 அன்று விலகினார். இதைத் தொடர்ந்து இவர் தனது சகாக்களுடன் சேர்ந்து தி. மு. க. மாதிரியில் மாநில அடிப்படையிலான கட்சியை உருவாக்கினார். இந்த புதிய கட்சி 1971 இந்தியப் பொதுத் தேர்தல் பிறகு தனது முதல் தேர்தலில் போட்டியிட்டது. இது 24% வாக்குகளையும் 32 இடங்களையும் பெற்றது.[3] இது சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பிசுவநாத் தாசு தலைமையில் ஓர் அரசாங்கத்தை அமைத்தது. இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. மேலும் சில உத்கல் காங்கிரசு உறுப்பினர்கள் மீண்டும் காங்கிரசுக்குச் செல்ல விரும்பினர். எனவே நந்தினி சத்பதி தலைமையில் காங்கிரசு அரசு அமைந்தது. எனினும், இந்த அரசு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1974இல் ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. உத்கல் காங்கிரசு சுதந்திராக் கட்சி மற்றும் பிரகதி சட்டமன்றக் கட்சி என்று அழைக்கப்படும் அரேகிருஷ்ணா மகாதாப் தலைமையிலான காங்கிரசு குழு ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் உத்கல் காங்கிரசு தனது எண்ணிக்கையை சற்று அதிகரித்து 35 இடங்களாக இருந்தது. எனினும் காங்கிரசு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது. 1974ஆம் ஆண்டின் இறுதியில் பிரகதி சட்டமன்றக் கட்சியின் அனைத்துக் கட்சிகளும் சரண் சிங் தலைமையிலான பாரதிய லோக் தளத்துடன் இணைக்கப்பட்டன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Grover, V. (1997). Indian Political System: Trends and Challenges. Deep & Deep Publications. p. 448. ISBN 978-81-7100-883-4. Retrieved 2019-07-01.
- ↑ Pioneer, The. "Bijubabu's life a saga of adventures, sacrifices". The Pioneer (in ஆங்கிலம்). Archived from the original on 27 August 2023. Retrieved 2022-05-02.
- ↑ Grover, V. (1997). Indian Political System: Trends and Challenges. Deep & Deep Publications. p. 453. ISBN 978-81-7100-883-4. Retrieved 2019-07-01.
- ↑ Das & Dr. C. P Nanda, P.M.N. (2001). Harekrushna Mahtab (in ஆங்கிலம்). Publications Division Ministry of Information & Broadcasting. p. 121. ISBN 978-81-230-2325-0. Retrieved 2019-07-01.