உதோன் தானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதோன் தானி(ஆங்கிலம்:Udon Thani) என்பது தாய்லாந்திலுள்ள இசான் பிராந்தியத்தின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. பிற முக்கிய மூன்று நகரங்கள் முறையே கோராத், உபோன் ராச்சதானி, உதோன் தானி மற்றும் கான் கென் போன்றவை ஆகும். இது உதோன் தானி மாகாணத்தின் தலைநகரமாகவும் உள்ளது.

இருப்பிடம்[தொகு]

உதோன் தானியின் புவியியல் இடவமைப்பு 17°25′N 102°45′E / 17.417°N 102.750°E / 17.417; 102.750 ஆக உள்ளது. இது, பாங்காக்கிலிருந்து தோராயமாக 560 கி.மீ. தூரம் ஆகும். உதோன் தாய்லாந்திலுள்ள வடக்கு இசானின் ஒரு முக்கிய அதிகாரப்பூர்வ மற்றும் வணிக மையமாக உள்ளது. மேலும் லாவோஸ், வடக்கு வியட்நாம் மற்றும் தெற்கு சீனாவின் நுழைவாயில் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

வியட்நாம் போரின்போது உதோர்ன் ராயல் தாய் விமானப்படை தளத்திற்கு அருகாமையில் இருந்ததால் இந்த நகரத்தின் பொருளாதாரம் உயர்ந்தது. மேலும் அந்தக் காலத்தின் நினைவூட்டல்களை பார்கள், காபி கடைகள் மற்றும் உணவகங்கள் வடிவில் வைத்திருக்கிறது. " இராணுவம் வந்தபோது உதோன் தானி நகரம், பட்டாயா போல ஆனது" என்று உள்ளூர் கட்டிடக் கலைஞர் ஒருவர் கூறியுள்ளார். "மேற்கத்திய உணவு வகைகள், உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகள் போன்றவை இராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல்லா இடங்களிலும் முளைத்தன. அதனால் இந்த நகரம் மிகவும் பரபரப்பான நகரமாக இருந்தது என அறியப்படுகிறது".

உதோன் தானியின் ராயல் தாய் விமானப்படை தளம் ஒரு அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய நுண்ணறிவு முகமையின் கறுப்பு தளத்தின் தளம் என்று பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது, இது "தடுப்பு தள பசுமை" என்று உள்நாட்டினருக்கு அறியப்படுகிறது, இது 31 வயதான சவுதி நாட்டைச் சேர்ந்த பாலஸ்தீனியரான அபு சுபாய்தாவை விசாரிக்கப் பயன்படுகிறது.இவர், ஒசாமா பின்லேடனின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவர் ஆவார். டிசம்பர் 2014 இல், அமெரிக்காவின் செனட் புலனாய்வுத் தேர்வுக் குழு (எஸ்.எஸ்.சி.ஐ) சி.ஐ.ஏ நுட்பங்கள் குறித்த ரகசிய 6,000 பக்க அறிக்கையின் நிர்வாக சுருக்கத்தை வெளியிட்டது. இரகசிய தளம் குறித்து குறைந்தது எட்டு தாய்லாந்து மூத்த அதிகாரிகளாவது அறிந்திருப்பதாக அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த விமானப்படை தளம் டிசம்பர் 2002 இல் மூடப்பட்டது.

பான் தங் மாவட்டத்தின் உதோன் தானி மாகாணத்தின் கிராமப்புறத்தில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய நுண்ணறிவு முகமையின் கருப்பு தளம் என்று முந்தைய தகவல்கள் குற்றம் சாட்டின.[2]

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரங்கள்[தொகு]

மாகாணத்தில் உள்ள 1,572,786 பேர் கொண்ட மொத்த மக்களில் உடோன் தானியில் மட்டும் 399,535 மக்கள் உள்ளனர். 1900 களின் நடுப்பகுதியில், சுமார் 46,700 வியட்நாமிய போர் அகதிகள் இங்கு குடியேறினர்   உடோன் தானிக்கு. அவர்களின் சந்ததியினர் இன்னும் உதோ தானியில் வசிக்கின்றனர்.[3] இன்று, உதோன் தானி தாய்லாந்து முழுவதிலும் மிகப்பெரிய வியட்நாமிய சமூகத்தைக் கொண்டுள்ளது.

வர்த்தகம்[தொகு]

சுரங்க தொழில்[தொகு]

இத்தாலிய-தாய் வளர்ச்சி நிருவனத்தின் முழு உரிமையாளரான ஆசியா பசிபிக் ரிசோர்சஸ், உடோன் தானி பொட்டாஷ் சுரங்கங்களுக்கு சலுகையை அளித்துள்ளது. மற்றும் அவற்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. பத்திரிகை தகவல்களின்படி, உதோன் தானிக்கு 25 வருடங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு மில்லியன் டன் சுரங்கத்திற்கு போதுமான பொட்டாஷ் உள்ளது. பொட்டாஷ் உரத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.

சுற்றுலா மூலம் வருவாய்[தொகு]

சுற்றுலாவின் சில வருவாய் தொல்பொருள் தளமான பான் சியாங்கிலிருந்து (நகரத்திலிருந்து நாற்பத்தேழு கிலோமீட்டர்) செல்லும் மற்றும் / அல்லது வரும் சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்புடையது.

குறிப்புகள்[தொகு]

  1. "Udon Thani". Tourism Authority of Thailand (TAT). Archived from the original on 23 June 2012. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
  2. Crispin, Shawn W (2008-01-25). "US and Thailand: Allies in Torture". Asia Times இம் மூலத்தில் இருந்து 2014-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141110191452/http://atimes.com/atimes/Southeast_Asia/JA25Ae01.html. பார்த்த நாள்: 2014-11-10. 
  3. Paanchiangwong, Songgot (Sep 2009). "A Note On Interference of Thai Reduplication on Vietnamese Spoken in Udon Thani Province of Thailand". Journal of the south-east Asian Linguistics Society 2: 241–245. http://pacling.anu.edu.au/series/SEALS-PDFs/JSEALS-2.pdf. பார்த்த நாள்: 2014-11-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதோன்_தானி&oldid=3235321" இலிருந்து மீள்விக்கப்பட்டது