உதவிப் பேராசிரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

உதவிப் பேராசிரியர் (Assistant Professor) என்பது, முக்கியமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் இணைப் பேராசிரியரின் தரத்திற்குக் கீழே உள்ள ஒரு பேராசிரியர்களுக்கான கல்வித் தரநிலையாகும். இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் இந்த தர நிலையே பின்பற்றப்படுகிறது.

கண்ணோட்டம்[தொகு]

உதவிப் பேராசிரியர் எனும் கல்லூரிகளில் ஆசிரியத் தொடக்க நிலை பொதுவாக முனைவர் பட்டம் பெற்ற பிறகு வழங்கப்படுகிறது. பொதுவாகப் பல ஆண்டுகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முநிநிலை ஆய்வாளர் பதவிகளை வகித்த பிறகு வழங்கப்படுகிறது.  இது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இணைப் பேராசிரியர் பதவிக்குக் கீழ் நிலையில் உள்ள நிலையாகும். மேலும் பெரும்பாலான பொதுநல வாயப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பதவிக்குச் சமமானதாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உதவிப் பேராசிரியர் என்பது ஆசிரியப் பணிக்கால நிலையில் பெரும்பாலும் முதல் நிலையாக உள்ளது. பொதுவான பேராசிரியர் வரிசையானது உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என முன்னேற்ற நிலையினை கொண்டுள்ளது. 7 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர்கள் பணிக்காலத்தை நிறைவு செய்தவர் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெறலாம்.[1]

நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களுடன், காலியாக உள்ள பணிக்கால உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அதிக தேவை உள்ளது. முனைவர் பட்டம் பெற்றவர்களில் 20% க்கும் குறைவானவர்கள் பட்டப்படிப்புக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் பதவிக்கு மாறுகிறார்கள்.

ஒப்பீடு[தொகு]

அட்டவணை பாரம்பரிய முக்கிய அமைப்புகளின் பரந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது, ஆனால் இந்த அமைப்புகள் அல்லது பிற தலைப்புகளின் கலவையைப் பயன்படுத்தும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. பொதுநல வாய நாடுகளில் உள்ள சில பல்கலைக்கழகங்களும் காமன்வெல்த் முறைக்குப் பதிலாக வட அமெரிக்க முறையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டன.

வட அமெரிக்க அமைப்பு காமன்வெல்த் அமைப்பு
பேராசிரியர்
(உயர்நிலை, புகழ்பெற்ற பேராசிரியர் அல்லது அதற்குச் சமமானவர் உட்பட)
பேராசிரியர்
பேராசிரியர் ரீடர் (முக்கியமாக ஐக்கிய இராச்சியம்) அல்லது இணைப் பேராசிரியர் (முக்கியமாக ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, அயர்லாந்து)
இணைப் பேராசிரியர் மூத்த விரிவுரையாளர் அல்லது முதன்மை விரிவுரையாளர்
உதவி பேராசிரியர் விரிவுரையாளர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதவிப்_பேராசிரியர்&oldid=3705989" இருந்து மீள்விக்கப்பட்டது