உள்ளடக்கத்துக்குச் செல்

உதரவிதான சுவாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதரவிதானத்தில் நடைபெறும் சுவாசம்-பச்சை நிறத்தில் காட்டும் உயிரோட்ட படம்

உதரவிதான சுவாசம், அல்லது ஆழ்ந்த சுவாசம் என்பது மார்புக் குழி மற்றும் வயிற்றுக் குழிக்கு இடையில் கிடைமட்டமாக உள்ள உதரவிதான தசையின் சுருக்கத்தால் ஏற்படுகிறது. இவ்வகை சுவாசத்தில் காற்று நுரையீரல்களுக்குள் நுழையும் போது மார்புக்கூடு உயர்ந்து வயிறு விரிவடைகிறது. உதரவிதான சுவாசம் அறிவியல்பூர்வமாக ''யூப்னியா- சாதாரண சுவாசம்'' என அழைக்கப்படுகிறது. இது பாலூட்டிகளில் இயற்கையான சுவாசமுறையாகும். பாலூட்டிகள் சூழலில் ஆபத்தான நிலை இல்லாத போது ஓய்வாக மேற்கொள்ளும் சுவாச நிகழ்வாகும்.

விளக்கம்

[தொகு]

ஒருங்கிணைந்த மருத்துவ நல மைய ஆய்வின் படி மருத்துவ நலனுக்காக  12.7 சதவிகிதம் அமெரிக்க ஆண்கள் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்[1]." "ஆழ்ந்த சுவாசமானது மூக்கு வழியாக மெதுவாக மற்றும் ஆழ்ந்த சுவாசமாக  10 முறை உள்ளிழுக்கப்பட்டு  அதே போல்  மெதுவாக மற்றும் முழுமையாக வெளி விடப்படுகிறது. இந்த செயல்முறையை 5 முதல் 10 முறை என ஒரு நாளில் பலமுறை மேற்கொள்ளலாம். "  [2]

டெக்சாஸ் ஆற்றுப்படுத்துதல் மற்றும் மன நல மைய பல்கலைக்கழகத்தின்படி "உதரவிதான சுவாசம்'' இரத்த ஓட்டத்தில் செல்கிற ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும் போது சாதாரண சுவாசத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இது 'பயம் மற்றும் பதற்றமான சூழலில் துலங்கலை தடுக்கிறது. மேலும் உடல் சாதாரண நிலையில் இருக்க தூண்டுவிக்கிறது." என்பதை விளக்கும் ஒலி-ஒளிக்காட்சி மூலம் விளக்குகிறார்கள்.[3]

மாற்று மருத்துவம்

[தொகு]

மாற்று மருத்துவம் மேற்கொள்ளும் சில பயிற்சியாளர்கள், உதரவிதான சுவாசத்தை உடல் நல மேன்மைக்கு பயன்படுத்தினால் நன்மை விளையும் என்று நம்புகின்றனர்.   [4]

ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் சில நேரங்களில் தளர்வு /ஓய்வு நிலையில் பயன்படுத்தப்படுகின்றன. இப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வதால், பொதுவாக ஏற்படும் மனஅழுத்தம் தொடர்புடைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறவோ அல்லது தடுக்கவோ இயலும், இவற்றுள் உயர் இரத்த அழுத்தம், தலைவலி, வயிறு நிலைகள், மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிறவும்அடங்கும்[5]

நுரையீரல் விரிவடைவதலின் போது ஏற்படும் மேல்நோக்கிய தாழ்ந்த அசைவுகளினால் ஏற்படும் சுவாசம்  ''ஆழ்ந்ததாகவும்'' விலா எலும்புகள் விரிவடைவதால் ஏற்படும் சுவாசம் '' மேலேட்டமாகவும்'' இருக்கும்.இவ்விரண்டு நிகழ்வுகளிலும் நுரையீரல் எடுத்துக்கொள்ளும் காற்றின் அளவு வேறுபடும். 

யோகா மற்றும் தியானத்திற்கு இடையேயான உறவு

[தொகு]

ஹத யோகா, தாய் சி,  மற்றும் தியான மரபுகள் உதரவிதான சுவாசம் மற்றும் வயிற்று சுவாசம் அல்லது தொப்பை சுவாசத்துக்கும் இடையேயான தெளிவான வேறுபாட்டை விளக்குகின்றன. மேலும் உதரவிதான சுவாசத்தின் குறிப்பிட்ட நுட்பம் மிகவும் பயனுள்ளது எனவும் கூறப்படுகிறது.

நன்மைகள்

[தொகு]

உதரவிதான சுவாசத்தை பொதுவாக மேற்கொள்வது , நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின், நுரையீரல் செயல்பாடு, இதய சுவாச உடற்பயிற்சி, சுவாசத் தசை நீளம் மற்றும் சுவாசத் தசை வலிமை போன்ற பல காரணிகளை மேம்படுத்த உதவுகிறது.[6] and respiratory muscle strength.[7] குறிப்பாக, இந்த நோயாளிகளுக்கு  உதரவிதான மூச்சு பயிற்சிகள் அவசியமானவை. இந்த நோயாளிகளுக்கு சிதைந்த மார்பு மற்றும் குறைந்த மார்பு விரிவாக்கத்தின் விளைவாக ஏற்படும் மூச்சுத் திணறல் (புனல் மார்பு) போன்றவை  மார்புக் குறைபாடு ஆகியவற்றுடன்  குறுகிய உதரவிதானம், விலாயிடைத்தசைகளில் நீள் தசைப்பிடிப்பு போன்றவை முக்கிய சுவாச வழிகளில் குறுக்கத்தை ஏற்படுத்தி அசாதாரணமான சுவாசத்திற்கு வழிவகுக்கும். .[8]

பாடலுடன் தொடர்பு

[தொகு]

சிறப்பாக பாடும் செயல்திறனைப் பெற உதரவிதான சுவாசம் அவசியமாக கருதப்படுகிறது.[9]

மேலும் பார்க்க

[தொகு]
 • மூச்சுவிடல்
 •  பிராணயாமா - தியானத்தின் போது பயன்படுத்தப்படும் மெதுவான மற்றும் விரிவான சுவாசம் 
 • மேலோட்டமான சுவாசம்- இச்சுவாசம்  உதரவிதான சுவாசத்திலிருந்து வேறுபட்டு  பல கவலைக் கோளாறுகளுடன் தொடர்புடையது

குறிப்பு

[தொகு]
 1. "Relaxation Techniques for Health: An Introduction" http://nccih.nih.gov/health/stress/relaxation.htm
 2. http://nccih.nih.gov/health/providers/camterms.htm "Terms Related to Complementary and Alternative Medicine"
 3. "diaphragmatic breathing video". Archived from the original on 2018-05-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.
 4. Shaw, B.S.; Shaw, I. (2013). "Review of the effectiveness of various modes of breathing training in asthma management". African Journal for Physical, Health Education, Recreation and Dance November (Supplement 1): 168–179. http://www.ajol.info/index.php/ajpherd. பார்த்த நாள்: 2015-02-11. 
 5. "To relax using this method, you consciously slow your breathing and focus on taking regular and deep breaths.
 6. Shaw, B.S.; Shaw, I.; Brown, G.A. (2013). "Concurrent aerobic and resistive breathing training improves respiratory muscle length and spirometry in asthmatics". African Journal for Physical, Health Education, Recreation and Dance November (Supplement): 180–193. http://www.ajol.info/index.php/ajpherd. பார்த்த நாள்: 2015-02-11. 
 7. Shaw, I.; Shaw, B.S. (2014). "The effect of breathing and aerobic training on manual volitional respiratory muscle strength and function in moderate, persistent asthmatics". African Journal for Physical, Health Education, Recreation and Dance Supplement 2 (September): 45–61. http://www.ajol.info/index.php/ajpherd. பார்த்த நாள்: 2015-02-11. 
 8. Shaw, B.S.; Shaw, I. (2011). "Pulmonary function and abdominal and thoracic kinematic changes following aerobic and inspiratory resistive diaphragmatic breathing training in asthmatics". Lung 189: 104–106. doi:10.1007/s00408-011-9281-8. பப்மெட்:21318637. 
 9. "Confused About Diaphragmatic Breathing?". Archived from the original on 2017-07-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.

பார்வை நூல்கள்

[தொகு]

பிற தொடர்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதரவிதான_சுவாசம்&oldid=3545049" இலிருந்து மீள்விக்கப்பட்டது