உதய் பிரகாஷ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உதய் பிரகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த இந்திய நடிகர் ஆவார். அவர் திருப்பத்தூர் சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் கால்பந்து வீரராக (அணித் தலைவராக) இருந்தார்.

தொழில்[தொகு]

விஜயசாந்தி நடித்த தெலுங்கு திரைப்படமான கார்தவயம் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததால் உதய் பிரகாஷ் பிரபலமானார். இந்த படம் அவருக்கு தமிழிலும் வைஜயந்தி ஐ.பி.எஸ் என வெளிவந்ததால், தமிழிலும் புகழ் பெற்றார்.பிறகு சின்னத் தம்பி திரைப்படத்தில் குஷ்பூவின் 3 சகோதரர்களில் ஒருவராக நடித்தார்.

இறப்பு[தொகு]

நடிகர் உதய் பிரகாஷ் குடிபழக்கத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டடார். கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். 18 ஆகஸ்ட் 2014 இல் இறந்தார்.[1] [2]

பகுதி திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1989 வருஷம் 16 தமிழ்
1990 கார்தவயம் தெலுங்கு
1990 புது புது ராகங்கள் தமிழ்
1991 அன்பு சங்கிலி விஸ்வநாத் தமிழ்
1991 சின்னத் தம்பி தமிழ்
1991 இதய வாசல் தமிழ்
1991 கிழக்கு கரை தமிழ்
1991 மன்னன் தமிழ்
1992 இது நம்ம பூமி தமிழ்
1992 சாமுண்டி தமிழ்
1993 உழைப்பாளி தமிழ்
1993 பேன்ட் மாஸ்டர் தமிழ்
1993 கட்டப்பொம்மன் ராஜப்பா தமிழ்
1993 காத்திருக்க நேரமில்லை அஜித் தமிழ்
1993 சின்ன ஜமீன் தமிழ்
1993 பிரதீப் தமிழ்
1993 ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் தமிழ்
1993 மனவரலி பெல்லி தெலுங்கு
1994 சத்தியவான் Gopi தமிழ்
1994 வீரா தமிழ்
1994 செந்தமிழ் செல்வன் தமிழ்
1994 சீமான் தமிழ்
1995 அன்பு மகன் தமிழ்
1995 மண்ணுக்கு மரியாதை தமிழ்
1996 மேட்டுக்குடி தமிழ்
1996 மிஸ்டர் ரோமியோ தமிழ்
1996 வெற்றி விநாயகர் தமிழ்
1997 அரசியல் ராம்குமார் தமிழ்
1997 பெரியதம்பி தங்கராசு தமிழ்
1997 புதைய மது தமிழ்
1997 தடையம் தமிழ்
1999 சிவன் உதை தமிழ்
1999 எதிரும் புதிரும் காவல் அதிகாரி தமிழ்
2003 திவான் சந்திரன் தமிழ்
2003 காதல் கிறுக்கன் தமிழ்
2004 ஜெய்சூர்யா தமிழ்
2004 சூப்பர் டா தமிழ்

குறிப்புகள்[தொகு]

  1. "Actor Udayprakash dead". indiaglitz.com (18 Aug 2004).
  2. "Actor dead". hindu.com (18 Aug 2004).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய்_பிரகாஷ்_(நடிகர்)&oldid=2919225" இருந்து மீள்விக்கப்பட்டது