உதயம் ( காப்பியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உதயம் என்பது காப்பிய நூலாகும். இந்நூலை இயற்றியவர் கலைவாணன் என்பவர் ஆவார். 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் இதுவும் ஒன்றாகும்.

நூலமைப்பு[தொகு]

இந்நூல் 29 காதைகளைக் கொண்டது.நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 923 ஆகும். விருத்தம் எனும் பாவகையால் ஆன காப்பியம் இது.

பெயர்க்காரணம்[தொகு]

காந்தியின் உடல் எரிக்கப்பட்ட போது அதிலிருந்து புறப்பட்ட நெருப்பின் எழுச்சியே உதயம் எனப்படுவதாக ஆசிரியர் காப்பியத்தை அமைத்துள்ளார்.

காப்பியக் கதை[தொகு]

பூமித்தாயின் கொலுமண்டபத்தில் உலக மங்கையர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர். இங்கிலாந்தின் எனும் பகட்டுப்பெண், அமெரிக்கப்பெண் உள்ளிட்ட பலரும் தமது அரியணையில் அமர்ந்தார்கள்.பாரததேவியை அமரவிடாமல் தள்ளுகிறாள் இங்கிலாந்தின். பாரத அன்னை வீறுபெறுகிறாள்.அவளிடம் தோற்று இங்கிலாந்தின் வெளியேறுகிறாள். இதுவே உதயத்தின் கதைக்கரு.

சிறப்புகள்[தொகு]

இக்காப்பியம் தேச விடுதலைக்காகப் பாடப்பட்டதாகும். இயேசுவின் மலைப்பொழிவுகளே காந்தியின் அறக்கொள்கைகளாக உருவெடுத்தன என்கிறார் திரு.வி.க.[1] இயேசுவின் மலைப்பொழிவின் மீது காந்தி கொண்டிருந்த பற்றினை உணர்ந்த கலைவாணன் தேவகுமாரன் கதை என்ற நூலை எழுதியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

1) கலைவாணன்,"உதயம்" நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2) பாக்யமேரி ," வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு " பக்கம்-382,383.

  1. திரு.வி.கல்யாணசுந்தரம் (1993). கிறித்து மொழிக்குறள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம். பக். 46. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயம்_(_காப்பியம்)&oldid=2722796" இருந்து மீள்விக்கப்பட்டது