உதயம் தொலைக்காட்சி (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உதயம் தொலைக்காட்சி (இலங்கை)
உதயம் தொலைக்காட்சி.png
ஒளிபரப்பு தொடக்கம் 2008 மே 1
நாடு இலங்கை
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இலங்கை
இணையம்
தலைமையகம் கொழும்பு
துணை அலைவரிசை(கள்) உதயம் செய்திகள்
வலைத்தளம் http://www.utv.lk/

உதயம் தொலைக்காட்சி அல்லது யூ தொலைக்காட்சி என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒளிபரப்பான தமிழ் மொழித் தொலைக்காட்சிச் சேவையாகும். இதுவே இலங்கையின் முதலாவது உயர் வரையறு தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையாகும்.[1] 2008 மே 1ம் திகதி இந்த ஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.[2] [3] கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்னர் உதயம் ரி.வியின் அலைவரிசை ரி.வி லங்கா ஒளிபரப்புச் சேவைக்கு உரியதெனத் தெரிவிக்கப்பட்டு ரிவி லங்காவில் சிங்கள மொழி நிகழ்ச்சிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இதில் தமிழ் நிகழ்ச்சிகளும், சில ரிவி லங்கா சிங்கள நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின. மாகாணசபைத் தேர்தல் முடியும் வரை செயற்பட்ட அறிவிப்பாளர்கள் பின்னர் சென்றுவிடவே வெறுமனே தமிழ்ப் பாடல்கள் மட்டும் ஒளிபரப்பாகின. இந்த ஒளிபரப்பு தேர்தல் நடைபெற்று சில தினங்களின் பின்னர் நிறுத்தப்பட்டிருந்தது. இது மட்டக்களப்பிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்பொழுது இந்த தொலைக்காட்சியில் செய்திகள், திரைப்படங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றது.[4]

நிகழ்ச்சிகள்[தொகு]

  • தனி ஒருவன்
  • சமர்
  • மக்கள் நம் பக்கம்
  • செய்திகள் 20
  • திரைப்படங்கள்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]