உதயப்பூர் வனவிலங்கு சரணாலயம்

ஆள்கூறுகள்: 26°48′57″N 84°25′57″E / 26.815789°N 84.4324626°E / 26.815789; 84.4324626
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதயப்பூர் வனவிலங்கு சரணாலயம்
Udaypur Wildlife Sanctuary
Map showing the location of உதயப்பூர் வனவிலங்கு சரணாலயம் Udaypur Wildlife Sanctuary
Map showing the location of உதயப்பூர் வனவிலங்கு சரணாலயம் Udaypur Wildlife Sanctuary
அமைவிடம்மேற்கு சம்பாரண் மாவட்டம், பீகார், இந்தியா
அருகாமை நகரம்பெத்தியா
ஆள்கூறுகள்26°48′57″N 84°25′57″E / 26.815789°N 84.4324626°E / 26.815789; 84.4324626
பரப்பளவு8.74& கி.மீ2

உதயப்பூர் வனவிலங்கு சரணாலயம் (Udaypur Wildlife Sanctuary) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒரு வனவிலங்கு சரணாலயமான இது 1978 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்வனவிலங்குச் சரணாலயம் 8.74 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

கண்டகி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் ஆக்சுபோ ஏரியின் ஈரநிலத்தில் உதயப்பூர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இச்சரணாலயத்தில் தாயகப் பறவைகளும் புலம்பெயர்ந்து வசிக்கும் பல்வேறு நீர்ப்பறவைகளும் உள்ளன. சதுப்பு நிலக் காடுகள், வறண்ட நதிக் காடுகள் மற்றும் செங்கருங்காலி காடுகள் போன்றவை உள்ளன.[1] கீழ் கங்கை சமவெளியில் ஈரமான இலையுதிர் காடுகள் சுற்றுச்சூழலில் இச்சரணாலயம் உள்ளது.

சரணாலயத்தில் ஓய்வு இல்லம் ஒன்றும் உள்ளது. பெத்தியா என்ற நகரம் அருகிலுள்ளது. பெத்தியாவை தலைமையிடமாகக் கொண்ட சம்பாரன் வனப் பிரிவின் துணை இயக்குநர் அதிகாரத்தின் உதயப்பூர் வனவிலங்கு சரணாலயம் செயல்படுகிறது. மேலும், பெத்தியா சதுப்பு நிலத்திலிருந்து சுமார் அரை மணி நேரம் பயணத் தொலைவில் சரணாலயம் உள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Negi, Sharad Singh (2002). Handbook of National Parks, Sanctuaries, and Biosphere Reserves in India. Indus Publishing. pp. 96-97