உதயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதயணன் பெருங்கதை [1] இலக்கியத்தின் காப்பியத் தலைவன். இவனது தந்தை சதானிகன். தாய் மிருகாபதி. காட்டில் கதிரவன் உதிக்கும் காலத்தில் பிறந்ததால் உதயணன் எனப் பெயர் சூட்டப்பட்டவன். பிரமசுந்தர முனிவர்பால் வளர்ந்தவன். கோடபதி என்னும் யாழை மீட்டித் தெய்வயானை என்னும் யானையை அடக்கித் தன் அடிமையாக அதனைக் பெற்றவன். யூகியை முதலமைச்சனாக வைத்துக்கொண்டவன். தாய்மாமன் விக்கிரமனால் சேதி நாட்டுக்கு அரசனானவன். தந்தையால் வத்தவ நாட்டு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றவன். சேதி நாட்டு ஆட்சிப் பொறுப்பை யூகியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் கோசம்பியில் இருந்துகொண்டு வத்தவ நாட்டை ஆண்டவன்.

உதயணனுக்குப் பிங்கலன், கடகன் என்னும் இரு தம்பியரும். வயந்தகன், உருமண்ணுவா, இடவகன் என்னும் தோழமை அமைச்சர்களும் உண்டு. வேறு சில தோழர்களும் இவனுக்கு ஆங்காங்கே உதவிவந்தனர்.

தமிழ் இலக்கியங்களில் உதயணன் கதை[தொகு]

  • மணிமேகலை நூலில் உதயணனை யூகி விடுவித்த செய்தி கூறப்பட்டுள்ளது. [2])
  • திருமங்கையாழ்வார் சிறிய திருமடலில் உதயணன் மனைவி வாசவதத்தை குறிப்பிடப்பட்டுள்ளாள். [3]

பெருங்கதையில் உதயணன்[தொகு]

உதயணகுமார காவியம் ஒப்புநோக்கு[தொகு]

சீவக சிந்தாமணி கதை ஒப்புநோக்கு[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. =கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. 
  2. கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய
    வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை
    வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய
    உஞ்சையில் தோன்றிய ஊகி அந்தணன் (65)
    உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு
    பரிவுஉறு மாக்களில் (மணிமேகலை காதை 15
  3. வாரார் வனமுலை வாசமததை வென்று
    ஆரானும் சொல்லப்படுவாள் -- அவளும்தன் (66)
    பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவே
    தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள் (67)
    ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயணன்&oldid=1839561" இலிருந்து மீள்விக்கப்பட்டது