உதயகுமார் மரண சர்ச்சை
உதயகுமார், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்தவர். சூலை 1971-இல் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதை[1] எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். இப்போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 25 காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆர்வக் கோளாறால் ஒரு கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள். மேலும் பல்கலைக்கழக வளாகத்தின் சுவற்றிலும் கழுதை படம் வரைந்து, அதன் கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு கருணாநிதி எழுதினர். இது கருணாநிதியின் கவனத்திற்கு வந்தும் கண்டு கொள்ளாது மாணவர்களின் எதிர்ப்பினை மீறி, காவல்படை பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மதிப்புறு முனைவர் பெற்றுக் கொண்டார். [2][3]
23 சூலை 1971 அன்று பல்கழகத்தில் கணிதவியலில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தமாணவர் கே. பி. உதயகுமார் பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காவல் துறையினர் தாக்குதலில் பலியானார் என்ற ஆதாரமற்ற வதந்தி நிலவியது. இறந்த உதயகுமாரின் பிணத்தைப் பார்த்து, இது என் மகன் இல்லை என்ற வாக்குமூலத்தை உதயகுமாரின் தந்தை பெருமாளிடமிருந்து காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றனர். காவல் துறையினர் அத்துடன் மாணவர் உதயகுமார் இறந்ததாக கூறப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது என அறிக்கை விட்டது. பல்கலைக்கழக வளாகக் குளத்தில் இறந்தது மாணவர் உதயகுமார் இல்லை எனில், இறந்த நபர் யார் என்ற விவரம் காவல்துறை விசாரணை நடத்தவில்லை. எனவே மாணவர் உதயகுமார் இறப்பின் சர்ச்சை இதுவரை தொடர்ந்து தொடர்கிறது. [4]
நீதியரசர் சந்துருவின் சுயசரிதை நூல்
[தொகு]நீதியரசர் கே. சந்துருவின் சுயசரிதை நூலில், உதயகுமார் மரண சர்ச்சையைக் குறிப்பிட்டுள்ளார்.[5][6]
விசாரணை ஆணையம் & இடைக்கால மனு
[தொகு]இறந்த மாணவர் கே. பி. உதயகுமார் மரணச் சர்ச்சை குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.எஸ். இராமசாமி தலைமையில் ஒரு ஆணையத்தை அமைக்க தமிழக அரசு 24 சூலை 1971 அன்று சட்டமன்றத்தில் தெரிவித்தது.
அப்போது இந்திய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த என். ராம், உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்து, விசாரணை வரம்புகள் தெளிவற்றதாக இருப்பதாக நீதிமன்றத்தில் நேரில் வாதிட்டார்[7]. என். ராமின் ரிட் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி டி. ராமபிரசாத ராவ், விசாரணை வரம்புகள் தெளிவற்றதாக இருப்பதாக மனுதாரர் கூறிய வாதத்தை ஏற்கவில்லை. பல்கலைக்கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் அனைத்துச் சம்பவங்களையும் உள்ளடக்கும் வகையில் விசாரணை வரம்புகள் போதுமான அளவு விரிவாக உள்ளது. பல்கலைக்கழகத்தைத் திறப்பது அல்லது மூடுவது சம்பந்தமாக, அது ஒரு தன்னாட்சி அமைப்பு என்பதால், அது ஒரு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதாக இருக்க முடியாது என்றும், ஆனால் அந்த ஆணையம் அந்த கேள்வியையும் விசாரித்து வருவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அடையாளம் தெரியாத உடல்
[தொகு]பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த அமைதியின்மை குறித்த ஆரம்ப அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது; 24 சூலை 1971 அன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞரின் உடல் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. "பணியாளர்களாலோ அல்லது மாணவர்களாலோ அடையாளம் காணப்படாத அந்த உடல், ஒரு முன்னாள் மாணவருடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது," என்று சூலை 25 அன்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகு, இந்த விவகாரம் குறித்து சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த எச். வி. அண்டேவால் எழுப்பப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்.. விலாவரியாக சொன்ன நீதிபதி சந்துரு
- ↑ In doctorate lies stepping stone - DMK heir to get honorary degree usually reserved for CMs
- ↑ Honorary Dr: More the Merrier
- ↑ "கருணாநிதியின் கெளரவ டாக்டர் பட்டத்தை எதிர்த்த மாணவன் உதயகுமார் இறக்க காரணமான கட்சியா கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுகிறது?". Archived from the original on 2019-10-22. Retrieved 2019-10-22.
- ↑ நீதிபதி சந்துருவின் சுயசரிதை நூலில் உதயகுமார் மரண சர்ச்சை
- ↑ கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்.. விலாவரியாக சொன்ன நீதிபதி சந்துரு
- ↑ The mysterious death of Annamalai University student Udayakumar 54 years ago