உள்ளடக்கத்துக்குச் செல்

உண்மையில், என் அன்பே, நான் சிறிது கூட கவலைப்படப் போவதில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உண்மையில், என் அன்பே, நான் சிறிது கூட கவலைப்படப் போவதில்லை
ரெட் பட்லர் (கிளார்க் கேபிள்)
கதாபாத்திரம்ரெட் பட்லர்
நடிகர்கிளார்க் கேபிள்
முதலில் பயன்படுத்தப்பட்டதுகான் வித் த விண்ட்
ஏ. எப். ஐ.யின் 100 திரைப்பட வசனங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றது

"உண்மையில், என் அன்பே, நான் சிறிது கூட கவலைப்படப் போவதில்லை" (ஆங்கிலம்: Frankly, my dear, I don't give a damn) என்பது 1939ஆம் ஆண்டு வெளி வந்த ஆலிவுட் திரைப்படமான கான் வித் த விண்ட் திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் ஆகும். இத்திரைப்படத்தில் கிளார்க் கேபிள் மற்றும் விவியன் லீ ஆகியோர் நடித்திருந்தனர். இவ்வசனத்தை ரெட் பட்லர் கதாபாத்திரமானது (கேபிள்) தனது கடைசி வார்த்தைகளாக இசுகார்லெட் ஓ'ஆராவின் கதாபாத்திரத்திடம் (லீ) கூறுகிறது. இசுகார்லெட் ஓ'ஆரா அழுதவாறே "நான் எங்கு செல்வது? என்ன செய்வது?" என்று கேட்கிறாள். ரெட் பட்லரின் மனதை மாற்றலாம் என்று நம்புகிறாள். மார்கரெட் மிச்சலின் 1936ஆம் ஆண்டுப் புதினமான கான் வித் த விண்ட்டிலிருந்து இந்த வசனமானது சற்றே மாறுபட்டு இருந்தது. அப்புதினத்தில் "என் அன்பே, நான் சிறிது கூட கவலைப்பட போவதில்லை" என்ற வசனம் இருந்தது.[1]

இசுகார்லெட் மற்றும் தங்களது அமைதியற்ற உறவை இறுதியாக ரெட் பட்லர் கைவிட்டு விட்டார் என்று இவ்வசனம் விளக்குகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பலனின்றி அவளைக் காதலிக்க வைக்க முயன்றதற்குப் பிறகு, அவள் இறுதியாக அவனை உண்மையாக விரும்புவதை ஒப்புக் கொண்டதற்குப் பிறகும் கூட ரெட் பட்லர் இதற்கு மேல் அவளுக்கு என்ன நடந்தாலும் அது தனக்குத் தேவையில்லை என்று இவ்வாறாகக் குறிப்பிடுகிறார்.

மரபு

[தொகு]

2005ஆம் ஆண்டு அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தால் இதுவரை வெளிவந்த திரைப்பட வசனங்களிலேயே இவ்வசனம் முதலிடத்தைப் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டது.[2] எனினும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வசனங்களைத் திரைப்படத்தில் பேசிய கதாபாத்திரமாக நடித்த மார்லன் பிராண்டோ இந்த வசனத்தைக் கேபிள் பேசிய முறையை விமர்சித்தார். லிசன் டு மி மார்லனால் (2015) வெளியிடப்பட்ட ஒலிப் பதிவுகளில் "ஒரு நடிகர் கதவை நோக்கி நடந்து செல்லும் போது, சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும் போது, அவர் நின்று திரும்பி 'உண்மையில், என் அன்பே, நான் சிறிது கூட கவலைப்படப் போவதில்லை' என்று கூறப் போகிறார் என்று உங்களுக்குத் தெரிந்து விடுகிறது" என்றார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dawn, Randee (December 14, 2014). "Frankly, my dear, I don't give a straw: The secret history of 'Gone With the Wind's' curse". Today. https://www.today.com/popculture/frankly-my-dear-i-dont-give-straw-gone-winds-secret-1D80341776.
  2. "AFI's 100 YEARS...100 MOVIE QUOTES". American Film Institute. சூன் 21, 2005. Retrieved மே 11, 2013.
  3. Rich, Katey (சூன் 8, 2015). "Why Marlon Brando Was Unlike Anyone Else, in Brando's Own Words". Vanity Fair. Retrieved மார்ச் 29, 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]