உள்ளடக்கத்துக்குச் செல்

உண்மடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளையத்தில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள உண்மடி

உண்மடி (napkin) அல்லது மேசைக் கைக்குட்டை அல்லது சிறு துண்டு என்பது உணவு உண்ணும் போது வாய் மற்றும் விரல்களைத் துடைக்க மேசையில் பயன்படுத்தப்படும் ஒரு சதுர துணி அல்லது காகிதத் திசு ஆகும். இது பொதுவாக சிறியதாகவும் மடிந்த நிலையிலும் இருக்கும், சில சமயங்களில் சிக்கலான வடிவங்களில் இருக்கும். 

சொற்பிறப்பியல் மற்றும் சொல்லியல்

[தொகு]

'உண்மடி (நாப்கின்)' என்ற சொல் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, உணவு உண்ணும் நேரத்தில் உதடுகள் அல்லது விரல்களைத் துடைப்பதற்கும் ஆடைகளைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படும் துணி அல்லது காகிதம் எனும் பொருள்படுகிறது. [1] இந்த வார்த்தையானது பழைய பிரஞ்சுவின் நேப்பே (ஆங்கிலம்:நேப்பேகின்) மற்றும் கின் எனும் பின்னொட்டு சேர்ந்து உருவானது.[2]

'நாப்கின்' என்பது " விடாய்க்கால அணையாடை" என்பதனையும் குறிக்கலாம். [3]

வரலாறு

[தொகு]

பண்டைய கிரேக்கர்கள் தங்கள் கைகளைத் துடைக்க ரொட்டியைப் பயன்படுத்தியதாக ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகின்றன. அல்சிஃப்ரானின் கடிதம் ஒன்றில் (3:44) ஒரு பத்தியும், அரிஸ்டோபனீசின் நாடகமான தி நைட்ஸில் உள்ள தொத்திறைச்சி விற்பனையாளரின் சில கருத்துக்களும் இதில் பரிந்துரைக்கப்படுகிறது. [4] இரண்டு நூல்களிலும் உள்ள ரொட்டியானது apomagdalia என்று குறிப்பிடப்படுகிறது, இது ரொட்டியின் உள்ளே இருக்கும் வெதுப்பியினைக் குறிக்கிறது.[5]

காகித உண்மடிகள்

[தொகு]

காகித உண்மடிகளின் பயன்பாடு பண்டைய சீனாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, அங்கு கிமு 2 ஆம் நூற்றாண்டில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. [6] காகித நாப்கின்கள் chih pha என அறியப்பட்டன. இவை சதுரமாக மடித்து, தேநீர் பரிமாற பயன்படுத்தப்பட்டது. காங்சூ நகர யூ குடும்பத்தினரின் உடைமைகளாக காகித உண்மடிகள் இருந்தன.[7]

1800 களின் பிற்பகுதியில் அமெரிக்காவிற்கு காகித உண்மடிகள் முதன்முதலில் இறக்குமதி செய்யப்பட்டன, ஆனால் 1948 வரை பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. "காலை உணவில் பயன்படுத்தப்படும் நாரிழைத்துணி உன்மடிகளுக்குப் பதிலாக காகித உண்மடிகளை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது" என எமிலி போஸ்ட் கூறினார்.[8][9]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Definition of "napkin"". www.merriam-webster.com.
  2. ""Napkin" - Definition, pictures, pronunciation and usage notes". www.oxfordlearnersdictionaries.com.
  3. "Definition of "napkin" by Oxford Dictionary". lexico.com. Archived from the original on 15 February 2020.
  4. Harry Thurston Peck, Harpers Dictionary of Classical Antiquities, 1898
  5. Liddell and Scott, Intermediate Greek-English Lexicon, 1889
  6. Tsien Tsuen-hsuin (1985). Paper and Printing. Joseph Needham, Science and Civilisation in China, Chemistry and Chemical Technology. 5 part 1. Cambridge University Press. p. 38. 
  7. Joseph Needham (1985). Science and Civilisation in China: Paper and Printing. Cambridge University Press. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-08690-5. At this time, tea was served from baskets made of rushes which held tea cups with paper napkins (chih pha).
  8. Waters, Michael (31 October 2019). "Paper napkins are expensive and environmentally unsound. Now the industry is trying to save itself.". Vox. https://www.vox.com/the-goods/2019/10/31/20921322/paper-napkins-towel-environmental. 
  9. "Paper Napkins Okeh; Emily Says So". Long Beach Independent. 2 December 1948. https://www.newspapers.com/clip/12969241/long_beach_independent/. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மடி&oldid=3597361" இலிருந்து மீள்விக்கப்பட்டது