உண்டியல்

உண்டியல் (Hundi - cash collection box) என்பது இந்தியக் கோயில்களில் பக்தர்களிடமிருந்து ரொக்கப் பொருட்களைப் பெறப் பயன்படுத்தப்படும் ஒரு சேகரிப்புப் பெட்டியாகும்.[1] 2016ஆம் ஆண்டு அதிக மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது, கண்காணிப்பு அவ்வளவு கடுமையாக இல்லாத உண்டியல் நிறுவப்பட்ட கோவில்களில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் அதிகமாக செலுத்தப்படலாம் என்ற கவலைகள் இருந்தன.[2]
வீடுகளில் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் சேமிப்பு பழக்கத்தினை அதிகரிக்க மண்ணால் ஆன உண்டியல்களை வழங்கி, அந்த உண்டியலில் குழந்தைகள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்பத் தொகையினைச் சேமிப்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
'பிக்கி பேங்க்' எனும் பன்றி வடிவ உண்டியல்களை வெளிநாடுகளில் குழந்தைகள் காசு சேமிக்கப் பயன்படுத்துகின்றனர். சில வங்கிகளும் வாடிக்கையாளர்களைக் கவர இந்த வகை உண்டியல்களை வழங்கினர். பண்டைய கிரேக்க, உரோமானியக் காலத்தில் களி மண்ணால் ஆன உண்டியல்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை பானை, ஜாடி வடிவில் துளையுடன் செய்யப்பட்டுள்ளன. பிங் களிமண்ணால் செய்யப்பட்ட இந்த உண்டியல்கள் பிரபலமடைந்தபோது ”பிக்கி பேங்” பிரபலமடைந்தது. உலகின் பல நாடுகளிலும் பன்றி வடிவ உண்டியல்கள் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. களி மண் தவிரப் பல பொருட்களினாலும் உண்டியல்கள் பல வித வடிவங்களிலும் செய்யப்படுகின்றன.[3]
மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப கோவில்களில் நன்கொடை/காணிக்கை வசூலிப்பதற்கான மின்னணு அமைப்பாக மின்னணு உண்டியல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் இணைய வழியில் கோவில்களுக்கு நன்கொடை அளிக்க இதன் மூலம் முடிகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Defunct notes worth Rs. 44 lakh found in temple hundi". thehindu.com. 2016-12-02. Retrieved 2016-12-22.
- ↑ "Black money in scrapped currency could be heading to religious places". hindustantimes.com. 2016-11-14. Retrieved 2016-12-22.
- ↑ (in ta) பன்றி உண்டியல் பிரபலமானது ஏன்?. 2025-02-20. https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/193475-.html.
- ↑ (in en-US) e-Hundi - ISKCON. 2025-02-20. https://iskconnewtown.com/e-hundi/.