உணவு அருங்காட்சியகம், தஞ்சாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உணவு அருங்காட்சியகம், தஞ்சாவூர்
உணவு அருங்காட்சியகம், வெளித்தோற்றம்
நிறுவப்பட்டது2021; 3 ஆண்டுகளுக்கு முன்னர் (2021)
அமைவிடம்தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
வகைவேளாண்மை, உணவு
உரிமையாளர்இந்திய உணவுக் கழகம், இந்திய அரசு
வலைத்தளம்Official site

உணவு அருங்காட்சியகம், (Food Museum) தஞ்சாவூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய உணவுக் கழகம் சார்ப்பில் இந்தியாவில் அமைந்துள்ள முதலாவது உணவு அருங்காட்சியகம் ஆகும்.

வரலாறு[தொகு]

இந்தியாவில் முதன்முதலாக 1965ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இந்திய உணவுக் கழக அலுவலகம் தொடங்கப்பட்டது. பின்னர் இவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக உணவு மேம்பாட்டில் பல்வேறு நிறுவனங்கள் இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டன. மேலும் இந்திய உணவுக் கழகத்தின் முதல் அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டு 2015 மே மாதம் இத்துறை அமைச்சர் இராம் விலாசு பாசுவானால் அடிக்கல் நாட்டப்பட்டது.[1] இப்பணிகள் முடிவடைந்த நிலையில் 15 நவம்பர் 2021அன்று மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொளி காட்சிமூலம் இந்த அருங்காட்சியகத்தினை துவக்கிவைத்தார்.[2]

காட்சிப்பொருட்கள்[தொகு]

இந்த அருங்காட்சியகம் உணவு எனும் கருப்பொருள் அடிப்படையிலானது. மீசோலெதிக் காலத்திலிருந்து உணவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை பல்வேறு சேமிப்பு முறைகள் மற்றும் ஆரம்பகால மனிதன் எதிர்கொண்ட சவால்கள் வரை பகிர்ந்து கொள்கிறது. அருங்காட்சியகம் இந்திய உணவுக் கழக வரலாறு, கொள்முதல், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு, மற்றும் விநியோகம் தொடர்பான பற்றிய முக்கிய தகவல்களை காட்சிப்பொருளாக உள்ளடக்கியுள்ளது. இந்திய உணவுக் கழகம் குறித்த ஒரு முப்பரிமாணத் திரைப்படம் மெய்நிகர் திரைப்படமும் குழந்தைகளுக்கான வினாடி வினா வசதியும் பார்வையாளர்களை ஈர்க்குவகையில் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Foundation laid for food museum". The Hindu (in Indian English). 2015-05-24. பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. Bureau, N. T. (2021-11-16). "First-of-its-kind museum in Thanjavur to highlight journey of Indian agriculture". News Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.