உணவு அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தைவானின் கோசியுங்கில் உள்ள தைவான் சர்கரை அருங்காட்சியகம்.

உணவு அருங்காட்சியகம் என்பது மனிதகுலத்தைத் தாங்கி நிற்கும் கதையைச் சொல்லும் ஒரு அருங்காட்சியகம் ஆகும். பிரான்சின் பாய்ஸ் நகரில் உள்ள குங்குமப்பூ அருங்காட்சியகம் போன்று ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றி இத்தகய அருங்காட்சியகங்களில் கவனம் செலுத்தப்படலாம். உதாரணமாக ஒரு தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவை அவர்கள் ஆராயலாம், எடுத்துக்காட்டாக ஜெர்மனியில் உல்மில் இருக்கும் ப்ரெட் அருங்காட்சியகம்; விஸ்கொன்சினில் உள்ள தேசிய கடுகு அருங்காட்சியகம் போன்றும்; கலிபோர்னியாவின் கோபியா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் உணவு கலை; அல்லது வரலாற்று பண்ணைகள், உதாரணமாக, அயோவாவின் லிவிங் ஹிஸ்டரி ஃபார்ம்ஸ்.

சில சந்தர்ப்பங்களில், உணவு அருங்காட்சியகங்களானது, உலகு எவ்வாறு சாப்பிடுகின்றது என்பதைக் கவனத்தில் கொள்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டு பிரான்சின், மான்ட்பில்லியில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகம், சுவிட்சர்லாந்தின், நெஸ்லே பவுண்டேசனின் அருங்காட்சியகம் போன்றவை ஆகும். ஜப்பான் நாட்டின் றாமென் அருங்காட்சியகம் என்பது ஒரு புதுமையான உணவு அருங்காட்சியகம் ஆகும், இங்கு றாமென் உணவு வரலாறும், பல்வேறு நூடுல்ஸ் உணவகங்களும், பேரங்காடி வடிவில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

உணவு அருங்காட்சியகங்கள் வளர்ந்து வரும் உணவு பாரம்பரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.[சான்று தேவை]


வெளி இணைப்புகள்[தொகு]