உணவுப் பாதுகாப்பு மசோதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உணவுப் பாதுகாப்பு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆகும். பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராயிருக்கும் போது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2013 -ஆம் இந்திய நாடாளுமன்றத்தில் இது தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவின் நோக்கம் அனைவருக்கும் உணவு என்பதாகும். நாடாளுமன்றத்தில் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக் சபாவில் 26-ஆம் தியதி , ஆகஸ்டு மாதம் 2013 அன்று இரவு, 9:45 மணியளவில்இம்மசோதா நிறைவேறியது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் வேறு பல பிராந்தியக்கட்சிகள் இம்மசோதாவை எதிர்க்கின்றன. மாநிலங்களுக்கு அளிக்கப்படும் உணவு தானியங்களின் அளவு குறைக்கப்படும் என அவை அஞ்சுகின்றன. எதிர்க்கட்சியான பா.ஜா.க "மசோதாவில் உள்ள குறைகளை திருத்த வேண்டும். தேர்தலை கருத்தில் வைத்து தான் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றுகிறது எனக் குறை கூறுகிறது.

பாலி - உலகவர்த்தக சபையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம்[தொகு]

விளைபொருட்களின் விற்பனை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அளிக்கப்படும் மானியம் குறித்த விவாதம் 2013 டிசம்பர் 3ம் தேதி துவங்கி இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற உலகவர்த்தக சபையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் நடைப்பெற்றது.இந்திய அரசு அளிக்கும் மானியம் என்பது “சந்தையை சீர்குலைக்கும்” நடவடிக்கை என்றும், இத்தகைய நடவடிக்கை உலக வர்த்தக சபையின் அனுமதிக்கு உட்பட்டதல்ல என்றும் இக்கூட்டத்தில் சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டுள்ளது.[1]

உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவான வாதங்கள்[தொகு]

  1. இந்திய நாட்டின் விவசாயத் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் 10 சதத்திற்கும் குறைவான தொகையே அரசு மானியமாக அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், மொத்த உள் நாட்டு உற்பத்தியின் அளவில் சராசரியாக கிட்டத்தட்ட சரி பாதி அளவை மானியமாக தங்களது நாட்டு விவசாயத் துறைக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அளித்து வருகின்றன. குறைந்த விலையில் இடுபொருட்களை அளிப்பது மற்றும் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுத்து கொள்முதல் செய்வது ஆகியனவற்றின் வாயிலாக இந்தியாவில் விவசாயிகளுக்கு மானியம் என்பது அளிக்கப்படுகிறது. பொருட்களின் விலையில் நுகர்வோருக்கு மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அளிக்கப்படும் மானியத்தின் பெரும்பகுதி, உற்பத்திக் காலத்தி லேயே விவசாயிகளுக்கு ரொக்கமாக அளிக் கப்பட்டுவிடுகிறது. 10 சதவீதத்திற்கும் குறைவான தொகையே பொருட்களின் விலை நிர்ணயிப்பில் மானியமாக அளிக்கப்படுகிறது.
  2. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களில் வெறும் 1 சதவீதம் பேர்தான் விவசாயத்தில் ஈடு படுகின்றனர். அதாவது வெறும் 4 லட்சம் அமெரிக்க குடும்பங்களே விவசாயத்தை சார்ந்து உள்ளன. ஆனால் இந்தியாவிலோ, 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். 4 லட்சம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கான நடைமுறையும், 60 கோடிப் பேருக்கு பட்டுவாடா செய்யத் தேவைப்படும் நடைமுறையும் ஒரே மாதிரியாக இருந்திட முடியாது என்றும் வாதிடப்படுகிறது.[1]

ஜி-33 நாடுகளின் வாதம்[தொகு]

நாட்டு மக்களுக்கான உணவுப் பாதுகாப் பினை உத்திரவாதம் செய்திட உலக வர்த்தக அமைப்பின் 10 சதவீதம் என்ற மானியத் திற்கான வரம்பு நீக்கப்பட வேண்டும் என இந்தியாவின் தலைமையில் ஜி-33 என அழைக்கப்படும் 46 வளர்ந்து வரும் நாடுகள் பாலியில் நடைபெற்ற கூட்டத்தின்போது வலியுறுத்தின.[1]

சமரசம்[தொகு]

ஆனால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, இந்த 10 சதவீதம் என்ற வரம்பினை வற்புறுத்துவதனை ஒரு நான்காண்டு காலத்திற்கு ஒத்திப் போடுவது என்ற சமரசத்திற்குத் தயாராகினர். இதன் பொருள் என்னவென்றால், நான்காண்டுகள் கழித்து தனது மக்களுக்கான உணவுப் பாதுகாப்பினை உத்திரவாதம் செய்யும் தனது அடிப்படை கடமையினை இந்திய அரசு நிறைவேற்றிட இயலாது போகும் என்பதேயாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 எம். கிரிஜா (9 சனவரி 2014). "ஏன் மண்டியிட வேண்டும்?". தீக்கதிர். தீக்கதிர்: pp. 4. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 12 சனவரி 2014.