உணவுப் பாதுகாப்பு நிறுவனம்
Other name | உணவுப் பாதுகாப்பு நிறுவனம் |
|---|---|
முந்தைய பெயர்கள் | மத்திய குடிமைப் பணி பயிற்சி நிறுவனம் |
| வகை | மத்திய குடிமைப் பணி பயிற்சி நிறுவனம் |
| உருவாக்கம் | 1997 |
| பணிப்பாளர் | Moitreyi Mohanty |
| அமைவிடம் | குர்கானி , , இந்தியா 28°28′59″N 77°04′21″E / 28.48306°N 77.07250°E |
| வளாகம் | 87, தில்லி ஜெய்பூர் எக்சுபிரசுவே -18 |
| சேர்ப்பு | இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு நிறுவனம் |
| இணையதளம் | www |
உணவுப் பாதுகாப்பு நிறுவனம் (Institute of Food Security) இது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இந்திய உணவுக் கழகத்தால் துவங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். மேலும் இது ஒரு மத்திய குடிமைப் பணி பயிற்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தகவல், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் மையமாக செயல்பட்டு வருகின்கிறது. இந்நிறுவனம் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் குர்கானில் உள்ள இந்திய உணவுக் கழக வளாகத்தில் அமைந்துள்ளது.
நிறுவனத்தின் வரலாறு
[தொகு]உணவுப் பாதுகாப்பு நிறுவனம் 1971 ஆம் ஆண்டு மத்திய பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் ஆரமிக்கப்பட்டது, இந்நிறுவனம் பிரிவு-I மற்றும் II அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் இன் கட்டுப்பாட்டு பயிற்சி மையமாக இருந்தது வருகின்றது. மத்திய குடிமைப் பணி பயிற்சி நிறுவனத்தின் கீழ் உள்ள நான்கு மண்டல பயிற்சி நிறுவனங்கள், பிரிவு-III ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றன. 1997 ஆம் ஆண்டில், மத்திய குடிமைப் பணி பயிற்சி நிறுவனம் இதன் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், இந்நிறுவனத்தின் அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் நிறுவனம் உணவுப் பாதுகாப்பு நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. இது அதன் முழு ஊழியர்களுக்கும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உள் பயிற்சி மையமாக அமைந்தது.
இந்த நிறுவனம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் ஊழியர்களுக்கு, உணவுப் பாதுகாப்பு, மேலாண்மை, கணினிகள் மற்றும் இந்த அமைச்சகத்தின் பொது செயல்பாடுகள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பணியாள்ர்களின் திறன்களை வளர்ப்பதற்காக, குறுகிய கால மற்றும் நீண்ட கால படிப்புகளின் அடிப்படையில் பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டு வருகின்றது. இப்பயிற்சியில் திறன்களை தூண்டல், தகுதிகாண் மற்றும் சேவையில் உள்ள திட்டங்கள் போன்றவைகள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது. ஆகவே இந்த நிறுவனம் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவாக செயல்பட்டு வருகின்றது. [1] [2]மத்திய நீர் ஆணையம், மாநில நீர் ஆணையங்கள், இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, ஹரியானா மாநில கூட்டுறவு வழங்கல் மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் மற்றும் ஹரியானா மாநில நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைக் கடைகள் லிமிடெட் போன்ற பிற நிறுவனங்களின் பயிற்சி பணியாளர்களையும் பயிற்சி அளித்து வருகின்றன. மேலும் இவர்களின் கோரிக்கைகளின்படி உணவுப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்து ந்டத்தி வருகின்றது.
நிறுவனத்தின் பொறுப்புகள்
[தொகு]இந்திய உணவுக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு மையமாக உணவுப் பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது, இந்நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கான பயிற்சித் தேவைகளுக்கு முழுமையான தீர்வை வழங்கி வருகின்றது.
ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஒரு முறையாவது துணை மேலாளர் நிலை வரை ஒவ்வொரு நிர்வாகிக்கும் தேவை அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகின்றது. இதனால் கிடைக்கக்கூடிய அறிவு மற்றும் திறன் மேம்பாடு அதிகரிக்கும்.
இந்த நிறுவனம் இதன் பயிற்சி தர அளவுருக்களை தொடர்ந்து மதிப்பீடு செய்வதன் மூலமும், சரியான நேரத்தில் திருத்தம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் அதன் சொந்த செயல்பாட்டில் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு அடைந்து வருகின்றது.
இந்த நிறுவனம் வெளிப்புற வாடிக்கையாளர்களுக்கு வணிக அடிப்படையில் பயிற்சி / ஆலோசனை பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் ஆண்டுதோறும் குறைந்தது 15% வருவாய் ஈட்டுவதையும், எதிர்காலத்தில் உள்கட்டமைப்பை பிற நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் தன்னிறைவு பெறுவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
வசதிகள்
[தொகு]
குருகிராம் (ஹரியானா) உணவுப் பாதுகாப்பு நிறுவனத்தில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
நிறுவனத்தின் பயிற்சி நடவடிக்கைகள் இரண்டு விரிவுரை அரங்குகள் மற்றும் ஒரு நவீன மாநாட்டு அரங்கைக் கொண்ட கல்விப் பகுதியில் அமைந்துள்ளன. அரங்குகள் ஆடியோ-ஒளி காட்சி அமைப்புகள், படமேறி கருவி மற்றும் கணினி ஆதரவுடன் பொருத்தப்பட்டுள்ளன.
இங்கு 5000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள நூலகம் அமைந்துள்ளது. பல அரசுத் துறைகளின் அறிக்கைகள் உள்ளன. மேலும் 18 பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கும் சந்தா செலுத்து வருகின்றது.
கணினி ஆய்வகம் அமைந்துள்ளது. கணினிகள் மற்றும் தொடர்புடைய தலைப்புகளில் பயிற்சி அளித்தல் மற்றும் நிறுவனத்தின் தகவல் மற்றும் தொடர்புத் தேவைகளைப் பராமரித்தல் மற்றும் ஆதரித்தல். பிணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிவேக இணைய இணைப்பு அனைத்து பயனர்களுக்கும் கிடைத்து வருகின்றது.
உணவு தானியங்களின் உயர் துல்லிய பகுப்பாய்விற்குப் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பெரினோகிராஃப், அமிலோகிராஃப், ஐஆர்-புரத பகுப்பாய்வி, வீழ்ச்சி எண் கருவி மற்றும் ஆல்வியோகிராஃப் போன்ற நவீன உபகரணங்களுடன் கூடிய தரக் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை ஐஎஃப்எஸ் பராமரித்து வருகின்றது. இந்த ஆய்வகம் எஃப்சிஐ ஆய்வகங்களில் மிகவும் நவீனமானது ஆகும்.
இங்குள்ள ஊழியர்கள், பயிற்சி பெறுபவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு விடுதி வசதி இருகின்றது. மேலும் உணவு, தங்குமிடம், மண்டபம், உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளைக் அமந்துள்ளன.
படிப்புகள்
[தொகு]உணவுப் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவுக்கு நீண்ட கால படிப்புகள் பின்வரும் தலைப்புகளில் இருகின்றன
செயல்பாடுகள் மற்றும் பொது மேலாண்மை
நிதி மற்றும் கணக்கு மேலாண்மை
தரக் கட்டுப்பாடு
இந்தி ராஜ்பாஷா மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்
கணினி நோக்குநிலை
பொறியியல் பணிகள் குறித்த பட்டறை
உணவுப் பாதுகாப்பு நிறுவனத்தின் சேர்க்கையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தகுதிகாண் பணியாளர்களுக்கான வழக்கமான குறுகிய கால படிப்புகளையும் கொண்டுள்ளது.
படங்கள்
[தொகு]-
குருகிராம், பிரிவு 18 இல் உள்ள உணவுப் பாதுகாப்பு நிறுவனத்தின் பிரதான கட்டிடம்.
-
இலையுதிர் காலக் காலையில் வளாகம்.
-
இலையுதிர் கால காலையில் உள்கட்டமைப்பு.
-
குருகிராமில் உள்ள விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு புல்வெளிகள்..
-
குருகிராமில் உள்ள முழுமையாக குளிரூட்டப்பட்ட விடுதி
-
இரவில் உணவுப் பாதுகாப்பு நிறுவனத்தின் பிரதான கட்டிடம்.
-
குருகிராம், பிரதான சொற்பொழிவு மற்றும் மாநாட்டு மண்டபம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Training". Findouter. Retrieved 9 July 2014.
- ↑ "Training others" (PDF). Jammu and kashmir Government - Consumer Affairs and Public Distribution Dept. 25 February 2014. Archived from the original (PDF) on 14 July 2014. Retrieved 9 July 2014.