உணவுத் தொழில் நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணவுத் தொழில்நுட்பம் என்பது உணவுப்பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை குறிக்கிறது. கீழ்கண்ட முறைகளை பின்பற்றி உணவுப்பொருட்கள் பதப்படுத்தப்படுகிறது.

உலர்த்தி நீர் அகற்றுதல்[தொகு]

நுண்ணுயிரிகள் நீர் இல்லாமல் வளராது.அதனால் உணவிலிருந்து நீரை வெளியேற்றி உணவுப்பொருள்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. பச்சைக் காய்கறிகள், பழங்கள், இறைச்சி மற்றும் மீன்கள் போன்றவை சூரிய ஒளியில் உலர்த்தி,நீரை அகற்றி கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன.

டப்பாக்களிலிடுதல், புட்டியிலிடுதல்[தொகு]

உணவுப்பொருட்கள் சமைக்கப்படுவதால் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன.ஆனால் அதிக நேரம் பாதுகாக்க முடிவதில்லை. உணவுப் பொருள்களில் உள்ள நொதிகள் பெரும வெப்பநிலையில் (210-250 டிகிரி ஃபாரன்ஹீட்) செயலிழக்கச் செய்யப்படுகின்றன.நொதிகள் செயலிழக்க செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் டப்பாக்கள் அல்லது புட்டிகளில் கற்றுப்புகா வண்ணம் அடைத்து பல மாதங்களுக்கு உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.

குளிரூட்டுதல்[தொகு]

உணவு பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் வளர சாதகமில்லாத சீரான குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகிறது.இதனால் உணவில் உள்ள சத்துப்பொருட்கள் அழிக்கப்படாமல் இயல்பான நிலையிலையே பாதுகாக்கப்படுகின்றன.

உணவுப்பதப்படுத்திகளைச் சேர்த்தல்[தொகு]

உப்பு,தேன்,சர்க்கரை,எண்ணெய் போன்றவை சிறந்த உணவுப்பதப்படுத்திகள் ஆகும்.உப்பு மற்றும் எண்ணெய் இறைச்சி, மீன், காய்கறிகளைப் பதப்படுத்தவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.சர்க்கரை மற்றும் தேன் ஜாம்,ஜெல்லி தயாரிக்கும்போது பதப்படுத்தியாக பயன்படுகிறது.

பாஸ்டியர் முறை[தொகு]

பாலில் உள்ள நோய் உண்டாக்கும் குச்சுயிரிகளை அழித்துப் பாலில் உள்ள சத்துக்கள் குறையாமல் பாதுகாக்க பாலை 60 டிகிரி வெப்பநிலையில் காய்ச்சி அதே வெப்பநிலையில் அரைமணி நேரம் வைத்த பின்பு வேகமாக குளிரச்செய்யப்படுகிறது. லூயிபாஸ்டியர் பாலைப் பாதுகாக்க இம்முறையை கண்டுபிடித்தார்.

மேற்கோள்[தொகு]

[1]

  1. வளநூல் குழு வல்லுனர்கள் (2008). உணவு. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். சென்னை. பக். 126, 127. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுத்_தொழில்_நுட்பம்&oldid=3718682" இலிருந்து மீள்விக்கப்பட்டது