உணவுக் கலப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உணவுக் கலப்படம் (Adulterated food) என்பது ஒரு பொருளில் அதே போன்று பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பது ஆகும். கலப்படம் பொருள்களின் தரத்தைக் குறைப்பது உடன் நுகர்வோருக்கு உடல்நலப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

கலப்படத்தால் எற்படும் தீமைகள் 1) உணவுப் பொருட்களுடன் கலக்கப்படும் கல், மண் முதலியன குடல் பகுதியை அடைத்து வலி மற்றும் உடல் உபாதைகளை எற்படுத்துகிறது. 2) உணவுப் பொருட்களடன் சேர்க்கக்கூடாத வண்ணம் மற்றும் சுவைக்கரிய பொருட்களைச் சேகரிப்பதால் புற்று நோய் எற்பட வாய்ப்புள்ளது. 3) சமையல் எண்ணெயில் செய்யப்படும் கலப்படத்தினால் வாயுத்தொல்லை காமாலை மற்றும் ஈரல் நோய்கள் ஏற்படுகின்றன. 4) கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்களால் கண் பார்வை மந்தம், வியிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

உணவுப் பொருட்களுடன் கலப்படம் செய்யப்படும் பொருட்கள் 1) அரிசி - கல்,சலவைக் கற்கள், மண் உருண்டைகள் 2) உளுந்து - கல், மண், தவிடு 3) டீத்தூள் - புளியங்கொட்டைத்தூள், பழைய டீத்தூள் 4) தேன் - வெல்லப்பாகு. சர்க்கரைப்பாகு 5) நெய் - வனஸ்பதி, மிருகக்கொழுப்பு 6) மசாலா பொருட்கள் - களிமண் உருண்டைகள், செங்கல் பொடி, பயன்படுத்தப்படாத வண்ணங்கள் 7) துவரை - கேசரி பருப்பு 8) மஞ்சள் - ஈய அசிடேட் 9) மிளகு - பப்பாளி விதை 10) கடுகு - அர்ஜிமோன் விதைகள்

இது போன்று மேலும் பல பொருட்களிலும் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

கலப்பட தடைச்சட்டம்[தொகு]

இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954ம் ஆண்டு அமுலாக்கப்பட்டது. இதினுள்ள பிரிவு 12ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். இச்சத்திலுள்ள பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகை ரூ.50ஐ திரும்பப் பெறும் வசதி உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூ.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வேளாண் செயல்முறைகள் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடப்புத்தகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுக்_கலப்படம்&oldid=2756169" இருந்து மீள்விக்கப்பட்டது