உணர் சுடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காதுகளால் ஒலியினை உணரமுடியும். ஆனால் காதுகளால் உயர் அதிர்வெண்ணுடைய மீயொலியினை உணரமுடியாது. மீயொலிகளை உணர எளிமையானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஒரு முறை உணர் சுடர் (Sensitive flame) முறையாகும். செங்குத்தாக அமைந்த ஒரு சிறு திறப்பு (Nozzle) வழியாக அதிக அழுத்தத்தில் எரி வளிமம் செலுத்தப்பட்டு, எரியுமாறு செய்தால், அழுத்ததினைப் பொறுத்து சுடர் உயரமாக எரியும். இந்நிலையில் மீயொலி அலைகள் சுடரின் அடிப்பகுதியில் விழுந்தால், சுடர் நிலையில்லாமல் அசையும், அதன் உயரம் குறைந்து காணப்படும். இதிலிருந்து மீயொலி அங்குள்ளதை அறியமுடியும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்_சுடர்&oldid=2229393" இருந்து மீள்விக்கப்பட்டது