உணர்வு நரம்பணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணர்வு நரம்பணு (ஆங்கிலம் : Sensory neuron) என்பது உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பும் நரம்பணுக்களாகும்.[1][2]

நால்வகை உணர்வு நரம்பணுக்கள்

அமைவிடம்[தொகு]

உணர்வு நரம்பணுக்கள் பெரு மூளையின் உணர்வு பகுதியின் புறணியில் அமைந்துள்ளது. மேலும் முள்ளந்தண்டு வடம் மற்றும் முன் உணர்வு நரம்பணு திறலிலும் உள்ளது. இவைகளை உட்காவும் நரம்பு இணைக்கிறது. அதாவது தோல் மற்றும் உடலுறுப்புகளில் உள்ள உணர்வு வாங்கி (ஆங்கிலம்:Sensory receptor) மூலம் பெறப்பட்ட தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்ட உணர்வுகளை முன் உணர்வு நரம்பணு திறலுக்கு (ஆங்கிலம்:Dorsal root ganglion) எடுத்து செல்கிறது இது முதல் நிலை நரம்பு (ஆங்கிலம்:First order neuron) ஆகும். பின் இது முள்ளந்தண்டு பகுதியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. பிறகு மூளையின் கீழ் புறணி பகுதியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. இந்த நரம்பிழை இரண்டாம் நிலை நரம்பு (ஆங்கிலம்:Second order neuron) என அழைக்கப்படுகிறது. இதன் பின் இங்கிருந்து நரம்பிழைகள் பெரு மூளையின் புறணியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. இது மூன்றாம் நிலை நரம்பணு என வழங்கப்படுகிறது.(ஆங்கிலம்:Third order neuron)

உணர்வு வாங்கிகள்[தொகு]

உணர்வு வாங்கிகள் (ஆங்கிலம்:Sensory receptors) என்பவை உடலின் வெளிப்புற மற்றும் உட்புற உணர்வுகளை பெற்று உட்காவும் நரம்புகள் மூலம் தூண்டுதல்களை உணர்வு நரம்பணுக்களுக்கு அனுப்புகிறது. இவைகள் புற, அக உணர்வு வாங்கிகள் என இரு வைக்கப்படும்.

புற உணர்வு வாங்கிகள்[தொகு]

  • பார்வை
  • நுகர்வு
  • செவிப்புலன்
  • ருசியறிதல்
  • வலி
  • தொடுதல்
  • வெப்பம்
  • குளிர்ச்சி
  • அதிர்வு
  • அழுத்தம் ஆகியவற்றிக்கான உணர்வு வாங்கிகள்

அக உணர்வு வாங்கிகள்[தொகு]

  • இரத்தக்குழாய்
  • உடல் உள்ளுறுப்பு
  • தசை
  • உடலசைவு
  • அக வலி ஆகியவற்றிக்கான உணர்வு வாங்கிகள்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Parsons, Richard (2018). CGP: A-Level Biology Complete Revision & Practice. Newcastle Upon Thynde: Coordination Group Pulbishing Ltd.. பக். 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781789080261. 
  2. Purves, Dale; Augustine, George; Fitzpatrick, David; Hall, William; LaMantia, Anthony-Samuel; McNamara, James; White, Leonard (2008). Neuroscience (4 ). Sinauer Associates, Inc.. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0878936977. 
  3. Sherrington C. The Integrative Action of the Nervous System. Oxford: Oxford University Press; 1906.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வு_நரம்பணு&oldid=2749962" இருந்து மீள்விக்கப்பட்டது