உட்பொதிக்கப்பட்ட மதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் உட்பொதி மதிப்பு (Embedded Value) என்பது எதிர்காலத்துக்கான இலாபத்துடன் கூடிய நிகர சொத்து மதிப்பை தற்கால மதிப்பில் இருந்து கணக்கிடும் புள்ளி விவரமாகும். இது காப்பீட்டு நிறுவனங்கள் நடப்பிசைவு அறிவியல் துறைவழி கொணர்ந்த ஓர் எதிர்கால கற்பிதமதிப்பாகும்.

பின்னணி[தொகு]

ஆயுள் காப்பீட்டு உறுதிப்பத்திரங்கள் நீண்ட கால ஒப்பந்தங்களாக உள்ளன. இதில் பாலிசிதாரர் தன்னுடைய வாய்ப்புள்ள எதிர்கால நிகழ்வு ஒன்றை ஈடுகட்ட மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணை செலுத்துகிறார்.

காப்பீட்டாளாருக்கான எதிர்கால வருமானம், காப்பீட்டு வாடிக்கையாளர்கள் செலுத்தும் தவணைகளின் அடிப்படையில் கிடைக்கிறது. எதிர்காலத்தில் காப்பீட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் முதிர்வுத் தொகை, பல்வேறு எதிர்கால செலவினங்களைக் கருத்தில் கொண்டு ஈடுசெய்யப்படுகிறது. எதிர்கால இலாபம், நடப்பு வருமானத்துக்கும் தேக்க ஒதுக்கீடுக்களில் இருந்து விடுவிக்கப்படும் தொகைக்கும் உள்ள வேறுபாடாகும்.

நிகர சொத்து மதிப்பு என்பது காப்பீட்டு நிறுவனத்தின் மொத்த சொத்துக்களுக்கும் பொறுப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்.

நிறுவனங்களுக்கு நிகர சொத்து மதிப்பு பொதுவாக புத்தக மதிப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது. உட்பொதி மதிப்பு நோக்கங்களுக்காக, நிகர சொத்து மதிப்புகள் சந்தை மதிப்புகளுக்குச் சரி செய்யப்பட வேண்டும். மேலும் இந்த நிகர சொத்து மதிப்பு, தேக்கச் சொத்துகளின் இயல்புப்படி அமைய, தள்ளுபடிக்கு உள்ளாகலாம். [அத்தகைய தேக்கச் சொத்துகளுக்கு எடுத்துகாட்டுகளாக, இலாப நிதிக்குள்ளேயே அடங்கும் சொத்துக்கள் அமையும்.]

காப்பீட்டாளர் மதிப்பு[தொகு]

நிகர சொத்துக்களின் சந்தை மதிப்பிற்கு [அதாவது கடந்தகால ஈட்ட இலாபங்களுக்கு] நிலவும் வணிகத்தின் இன்றைய மதிப்பைச் [அதாவது எதிர்கால இலாபங்களைச்] சேர்த்து உட்பொதிக்கப்பட்ட மதிப்பை அளவிடலாம்.

இது காப்பீட்டு மதிப்பின் ஒரு பழமை அளவாகும். இது ஏற்கனவே உள்ள உறுதிப்பத்திரங்களிலிருந்து வருங்கால இலாபங்களை மட்டுமே கருதுகிறது. அதனால் காப்பீட்டுதாரர் எதிர்காலத்தில் புதிய உறுதிப்பத்திரங்களை விற்கக்கூடும் என்ற சாத்தியத்தை புறக்கணிக்ககிறது. இது நல்லெண்ணத்தையும் ஒதுக்கி வைக்கிறது. இதன் விளைவாக காப்பிட்டாளர் அதன் உட்பொதி மதிப்பை விட கூடுதலான மதிப்புள்ளவராகவே இருக்கிறார்.

வாய்பாடு[தொகு]

உட்பொதி மதிப்பு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.:

EV = PVFP + ANAV
V=உட்பொதி மதிப்பு; PVFP= எதிர்கால இலாபங்களின் தற்போதைய மதிப்பு; ANAV= சரிசெய்யப்பட்ட நிகர சொத்து மதிப்பு.

மேம்பாடுகள்[தொகு]

ஐரோப்பிய உட்பொதி மதிப்பு, EEV என்பது CFO அரங்கத்தில் அமைக்கப்பட்ட EV மதிப்பின் ஒருவகை மாறுபாடே ஆகும். இது அதிக அளவு வெளிப்படைத்தன்மையும் ஒப்பிடுதன்மையும் உள்ள முறையில் அளவுருக்களைத் தேர்ந்தெடுத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கான முறையான வழிமுறைகளை தருகிறது.

சந்தை சார்ந்த உட்பொதி மதிப்பு என்பது மிகவும் பொதுவான முறையாகும். இதற்கு EEV மதிப்பு ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

வெளி இணைப்புக்கள்[தொகு]