உள்ளடக்கத்துக்குச் செல்

உட்டா பிரிட்சே ஆல்வென்சுலிவென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உட்டா பிரிட்சே வான் ஆல்வென்சுலிவென் (Uta Fritze-von Alvensleben) (பிறப்பு:1955) ஒரு செருமானிய வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் மூனிச்சில் பிறந்தார். இவர் 2003 இல் செருமானிய இயற்பியல் கழகத்தின் எர்த்தா சுபோனர் பரிசைப் பால்வெளியின் படிமலர்ச்சிப் பணிக்காகப் பெற்றார்.[1]

கல்வி

[தொகு]

இவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் மெய்யியலும் படித்தார் படிக்கும்போதே இவர் வெளிநாட்டில் கிரேனோபுள் பல்கலைக்கழகத்திலும் ஜெனிவாவில் செர்னிலும் பணிப்ய்ரிந்துள்ளார். பிறகு இவர் 1982 இல் தன் பட்டயப் படிப்பை கோட்டிங்கனில் முடித்துள்ளார். இவர் 1089 இல் செம்பெயர்ச்சி அளக்கை முடிவுகளைப் பயன்படுத்தி அருகில் உள்ள பால்வெளிகளின் கதிர்நிரலியல் படிமங்களை ஒப்பீட்டு ஆய்வுவழி தன் முனைவர் பட்டத்தை முடித்தார் .[2]

வாழ்க்கைப்பணி

[தொகு]

இவர் 2001 ஜனவரியில் இருந்து கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தை வாழிடமாக ஏற்று அப்பல்கலைக்கழக நோக்கீட்டகதில் பாவெளிகளின் படிமலர்ச்சியை அண்டக் கால அளவுகோலில் ஆய்வு செய்தார். இங்கு இவர் பின்வரும் ஆண்டுகளில் இதற்கு அபுள் தொலைநோக்கியின் தரவுகளையும் கணினிப் படிமங்களையும் பயன்படுத்தி பால்வெளிகள், புறப் பால்வெளிகள் ஆராய்ச்சித்துறையில் ஆய்வோடு கல்விப்பணியும் ஆற்றினார். இவர் கோட்டிங்கன் பால்வெளிப் படிமத்தோடு அண்டக் கட்டமைப்பு உருவாக்க்க் காட்சிவகைகளையும் ஆய்வு செய்தார்.

இவர் 2002 இல் செருமானிய இயபியல் கழகத்தினெர்த்தா சுபோனர் பரிசைப் பெற்றார். இப்பரிசு அண்டக் கால அளவுகோலில் பால்வெளிகளின் கதிர்நிரல், வேதியியல் உருவாக்க ஆய்வுக்காகவே தரப்பட்டது. இந்த ஆய்வில் பால்வெளிகளின் ஊடாட்ட நிலைமைகளையும் கருத்தில் கொண்டார். இந்த விருதளிப்பு விழா கனோவரில் நடந்த 67 ஆவது இயற்பியல் கருத்தரங்கில் 2003 மார்ச்சில் தரப்பட்டது ,

இவர் 2005 இல் ஐரோப்பியத் தெற்கு நோக்கீட்டகத்தில் சேர்ந்து அதன் நோக்கீட்டுத் திட்டக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.சிலியில் இருந்து எட்டு பெரிய தொலைநோக்கிகளின் நேரத்தைப் பல்வேறு அறிவியலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கூட்டுப் பொறுப்பில் இருந்துள்ளார்.[3]

பிறகு இவர் எர்த்துபோடுசயர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். அங்கே இவர் பால்வெளிப் படிமலர்ச்சி ஆராய்ச்சிக் (கலெவ்) குழுவில் பங்கேற்றுள்ளார்.இவர் அங்கு வானியற்பியல் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொள்வதோடு கல்வியும் பயிற்றுவித்துள்ளார்.[4]

2008 இல் இருந்து கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார் இங்கு இவர் பால்வெளிகளின் ஒன்றிய கதிர்நிரல், வேதியியல், அண்டவியல் படிமலர்ச்சிக்கான கோட்டிங்கன் படிமலர்ச்சி தொகுப்பு நெறிமுறை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

இவர் பன்னாட்டு வானியல் ஒன்றிய உறுப்பினர் ஆவார்.[5]

வெளியீடுகள்

[தொகு]

இவர் 1989 முதல் 2007 வரை தனது வெளியீடுகளை உட்டா பிரிட்சே வான் அல்வென்சுலிவென் எஉம் பெயரில் வெளியிட்டார். இவர் 2011 இல் இருந்து கோர்வினியனம் பள்ளியில் கணிதமும் இயற்பியலும் கற்பித்து வருகிறார்.

இவரது மிகப் பரவலாகச் சான்று கட்டப்பட்ட ஆய்வுரை, வளிம உமிழ்வுகளையும் வரி உமிழ்வுகளையும் சேர்த்து மேம்படுத்திய கலெவ் (GALEV) படிமம் என்பதாகும். இளம் பால்வெளிகளையும் துல்லியமாக உருவகம் செய்யும் மேம்படுத்திய படிமமே அது.

இந்த ஆய்வுரை 2020 மே வரை 184 மேற்கோள்களில் சான்றாகச் சுட்டப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Öffentlichkeitsarbeit, Georg-August-Universität Göttingen-. "Presseinformationen - Georg-August-Universität Göttingen". www.uni-goettingen.de (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.
  2. Meylan, Georges (2013-11-11). QSO Absorption Lines: Proceedings of the ESO Workshop Held at Garching, Germany, 21–24 November 1994 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-49458-4.
  3. Öffentlichkeitsarbeit, Georg-August-Universität Göttingen-. "Presseinformationen - Georg-August-Universität Göttingen". www.uni-goettingen.de (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.
  4. "Homepage of Galaxy Evolution (Galev) Group, Centre for Astrophysics Research, University of Hertfordshire". members.galev.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.
  5. "International Astronomical Union | IAU". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.
  6. "INSPIRE". inspirehep.net. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.