உட்செலுத்தலுக்கான நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sterile water for injection
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் FDA Professional Drug Information
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 7732-18-5
ATC குறியீடு V07AB
ChemSpider 937
வேதியியல் தரவு
வாய்பாடு H2O

உட்செலுத்தலுக்கான நீர் (Water for injection, WFI) என்பது மாசு இல்லாத கூடுதல் உயர் தரமான நீர் ஆகும்.[1] ஊசி மூலம் வழங்கப்படும் கரைசல்களை உருவாக்க ஒரு நுண்ணுயிரற்ற வடிவம் பயன்படுத்தப்படுகிறது.[2] இத்தகைய பயன்பாட்டிற்கு முன், ஐசோடோனிக் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள கரைசல்களை செய்ய மற்ற பொருட்களை பொதுவாக சேர்க்க வேண்டும்.[3] இது ஊசி மூலம் ஒரு நரம்பு, தசை அல்லது தோலின் கீழ் கொடுக்கப்படலாம்.[4] நுண்ணுயிர்களுடன் கூடிய நீரானது உற்பத்தி செயற்பாட்டின் பொழுது பின்னர் நிகழும் கிருமியழித்தல் மூலம் உற்பத்தியில் பயன்படுத்தப்படலாம். [5]

அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஐசோடோனிக் செய்யாமலுள்ள கரைசலை ஊசி மூலம் ஒரு நரம்புக்குள் செலுத்தப்படுவதால், இது சிவப்பு இரத்த அணுக்களில் முறிவினை ஏற்படுத்தலாம்.[3] இது சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும் .[3] அதிகப்படியான அளவு திரவ சுமையை ஏற்படத்தக்கூடும்.[4] உட்செலுத்தலுக்கான நீர் பொதுவாக வடிகட்டுதல் அல்லது தலைகீழ் சவ்வூடுபரவல் மூலம் தயாரிக்கப்படுகிறது.[5] இது 100மில்லி தண்ணீரில் ஒரு மி.கி.க்கு குறைவான தனிமங்களை கொண்டிருக்க வேண்டும். [5] பாக்டீரியா வளர்ச்சியை நிறுத்தும் காரகிகளுடான வடிவங்களும் கிடைக்கின்றன. [5]

இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ளது, இது ஒரு சுகாதார அமைப்பில் தேவைப்படும் மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்து ஆகும். [6] உட்செலுத்தலுக்கான நீர் நேரடியாகவே கடைகளில் மருந்து சீட்டு இன்றி கிடைக்கிறது.[3] வளரும் நாடுகளில் 10மில்லி குப்பிக்கான மொத்த விலை 0.03–0.15 அமெரிக்க டாலர்கள் ஆகும்.[7] ஐக்கிய இராச்சியத்தில் தே.ம.சே., நிலையத்தில் இந்த தொகை 0.25 முதல் 1.40 பவுண்டுகள் வரை செலவாகும்.[8]

மற்ற பெயர்கள்[தொகு]

Aqua ad iniectabilia or aqua ad injectionem

குறிப்புகள்[தொகு]

  1. "<1232> Water for Pharmaceutical Purposes". மூல முகவரியிலிருந்து 11 March 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 January 2017.
  2. WHO Model Formulary 2008. பக். 493. Archived from the original on 13 December 2016. https://web.archive.org/web/20161213060118/http://apps.who.int/medicinedocs/documents/s16879e/s16879e.pdf. பார்த்த நாள்: 8 January 2017. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Sterile Water for Injection - FDA prescribing information, side effects and uses". மூல முகவரியிலிருந்து 18 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 January 2017. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Pro2017" defined multiple times with different content
  4. 4.0 4.1 "Water for Injection - FDA prescribing information, side effects and uses". மூல முகவரியிலிருந்து 18 September 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 January 2017.
  5. 5.0 5.1 5.2 5.3 Theory and Practice of Contemporary Pharmaceutics. பக். 396. Archived from the original on 2017-01-16. https://web.archive.org/web/20170116162803/https://books.google.ca/books?id=whiC7aSFLY8C&pg=PA396.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Gh2004" defined multiple times with different content
  6. "WHO Model List of Essential Medicines (19th List)". World Health Organization (April 2015). மூல முகவரியிலிருந்து 13 December 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 December 2016.
  7. "Water for Injection". International Drug Price Indicator Guide. பார்த்த நாள் 8 December 2016.
  8. British national formulary : BNF 69. 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]