உட்காரும் உரிமை

உட்காரும் உரிமை (Right to sit) என்பது தொழிலாளர்களுக்குப் பணியிடத்தில் இருக்கை வழங்குவதற்கான உரிமையை வழங்கும் சட்டங்களையும் கொள்கைகளையும் குறிக்கும். ஆஸ்திரியா, ஜப்பான், ஜெர்மனி, மெக்ஸிகோ, பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா, ஐக்கிய இராச்சியம், ஜமைக்கா, தென்னாப்பிரிக்கா, ஈஸ்வதினி, கேமரூன், தான்சானியா, உகாண்டா, லெசோதோ, மலேசியா, பிரேசில், இஸ்ரேல், அயர்லாந்து, சாம்பியா, கயானா, இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, பிரிட்டிஷ் கடல்கடந்த வட்டாரங்களான ஜிப்ரால்டர், மாண்ட்செராட் ஆகியவை "உட்காரும் உரிமை" சட்டங்கள் அல்லது கொள்கைகளை நிலைநாட்டியுள்ள ஆட்சிப்பகுதிகளுள் அடங்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில், கனடாவில் உள்ள பெரும்பாலான 1881 தொடங்கி 1917—க்கு முன்னரே பெண் தொழிலாளர்களுக்கு உட்காரும் உரிமையை நிறைவேற்றிவிட்டன.
1964-ஆம் ஆண்டு பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு நிறைவேற்றிய சுகாதார (வணிகம் மற்றும் அலுவலகங்கள்) உடன்படிக்கையில் உட்காருவதற்கான உரிமையும் உள்ளடங்கியிருந்தது. 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, 52 நாடுகள் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன.

உலகச் சட்டங்கள்
[தொகு]இந்தியா
[தொகு]

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, இரண்டு இந்திய மாநிலங்கள் பணியிடத்தில் உட்காரும் உரிமையை நிறைவேற்றியுள்ளன,
கேரளா
[தொகு]இந்தியாவின் பணியிடங்களில் உட்கார்ந்து பணியாற்றும் உரிமை இயக்கத்தை கேரளாவைத் தளமாகக் கொண்ட பெண்ணிய தொழிலாளர் சங்கமான பென்கூட்டு வழிநடத்தியது. கோழிக்கோடு நகரத்தைச் சேர்ந்த, ஒரு தையல்காரராக இருந்து செயற்பாட்டாளராக உருவெடுத்த விஜி பள்ளித்தோடி, பெண்கூட்டு தொழிலாளர் சங்கத்தை நிறுவினார்.[1]
கேரளா, 2018-ஆம் ஆண்டு உட்காருவதற்கான உரிமையை நிலைநாட்டும் சட்டத்தை நிறைவேற்றியது. இதுவே இந்தியாவில் இவ்வாறு நிறைவேற்றப்பட்ட முதல் சட்டமாகும்.
விஜி கருத்துப்படி, சட்டத்தில் மாற்றங்கள் இருந்தபோதிலும், சில முதலாளிகள் இன்னும் இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர். இருக்கைகளை உறுதி செய்வதற்கான இயக்கம் இன்னும் முடிவடையவில்லை என்று குறிப்பிடும் விஜி, "பல முதலாளிகள் இன்னும் சட்டத்திற்குக் கட்டுப்படுவதில்லை. அவர்கள் தங்கள் ஊழியர்களை உட்கார அனுமதிப்பதில்லை என்பதில் இன்னும் பிடிவாதமாக உள்ளனர். இது மாற வேண்டும்" என்று கூறுகிறார்.[2]
தமிழ்நாடு
[தொகு]கேரளாவைத் தொடர்ந்து 2021 செப்டம்பரில் இதேபோன்ற ஒரு சட்டத்தை தமிழ்நாடு இயற்றியது.[3] தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் இச்சட்டத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947-இன் திருத்தப்பட்ட உட்பிரிவாக உட்காரும் உரிமை வழங்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரிவு 22-ஏ, திருத்தம் பின்வருமாறு கூறுகிறது: "ஒவ்வொரு நிறுவனத்தின் வளாகத்திலும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் வேலைநேரத்தின் போது உட்கார்ந்தபடியே பணியாற்றவோ, இளைப்பாறவோ கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகவே, வேலை நேரம் முழுவதும் கட்டாயம் இடைவிடாது நின்று கொண்டே தான் பணியாற்ற வேண்டும் என்கிற சூழ்நிலையைத் தவிர்க்கலாம்"[4]
மலேசியா
[தொகு]மலேசிய தொழிலாளர் சட்டம் ஒரு தொழிலாளியின் உட்காரும் உரிமையைப் பாதுகாக்கிறது. தொழிற்சாலைகள், இயந்திரங்கள் (பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலவாழ்வு) ஒழுங்குமுறைகள் 1970 விதியில் 30 (1), (2) ஆகிய பிரிவுகள் இந்த உரிமையைப் பற்றி விவரிக்கின்றன.[5]
சிங்கப்பூர்
[தொகு]சிங்கப்பூரின் "சில்லறை வர்த்தகம், வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான இருக்கைகள்" சட்டம் உட்காருவதற்கான உரிமையை உறுதி செய்கிறது.[6]
இலங்கை
[தொகு]இலங்கை கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டம் 1954, பெண் தொழிலாளர்களுக்கு உட்காருவதற்கான உரிமையை வழங்கியது.[7]
நிற்பதற்கான உரிமை
[தொகு]சில ஆட்சிப்பகுதிகள் உட்காரும் உரிமை, நிற்கும் உரிமை ஆகிய இரண்டையுமே பாதுகாக்கின்றன. அமெரிக்க சம வேலைவாய்ப்புகள் ஆணையத்தின் கூற்றின் படி, மாற்றுத்திறனாளி அமெரிக்கர்கள் சட்டம், கருவுற்ற தொழிலாளர்கள் நலச் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களும் உரிய மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற பெண்கள் பணியிடத்தில் எழுந்து நிற்கும் உரிமையை உறுதிசெய்கின்றன.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Why this tailor-activist from Kerala is in the BBC's 100 inspiring women list". இந்தியன் எக்சுபிரசு. 17 March 2019. Retrieved 2021-10-27.
- ↑ Raveendran, Aabha (8 March 2024). "A decade on, 'Right to sit' campaigner says struggle is yet to end". The Hindu (The Hindu.com). https://www.thehindu.com/news/national/kerala/a-decade-on-right-to-sit-campaigner-says-struggle-is-yet-to-end/article67929621.ece. பார்த்த நாள்: 2024-07-07.
- ↑ "Indian shop workers – most of them women – win the right to sit". Aljazerra English. Retrieved 2021-10-26.
- ↑ "'Right to sit': Tamil Nadu tables Bill mandating establishments to provide seating for employees". தி இந்து. 6 September 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-tables-bill-mandating-establishments-to-provide-seating-for-employees/article36317057.ece. பார்த்த நாள்: 2021-11-05.
- ↑ "GUIDELINES ON OCCUPATIONAL SAFETY AND HEALTH FOR SEATING AT WORK". Malaysian Department of Occupational Safety and Health (DOSH). Retrieved 2021-11-13.
- ↑ "Employment Bill". Attorney-General of Singapore. Retrieved 2023-09-30.
In all rooms of any premises where retail trade or business is carried on and where employees are working the employer shall provide seats behind the counter, or in such other position as may be suitable for the purpose, and such seats shall be in the proportion of not less than one seat to every three employees in each room and it shall be the duty of the employer to permit the employees to make use of such seats whenever the use thereof does not interfere with their work, and the employer shall in such manner and form as may be prescribed by regulations made by the Minister give notice informing such employees that they are intended to do so.
- ↑ "SHOP AND OFFICE EMPLOYEES ACT". International Labour Organization. Retrieved 2021-11-21.
- ↑ "Regulations To Implement the Pregnant Workers Fairness Act". Federal Register. 11 August 2023. Retrieved 2024-05-30.