உடையார்பாளையம் அருள்மிகு திரு வில் வளைத்த விநாயகர் ஆலயம்
இந்த article எந்தப் பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
அருள்மிகு திரு வில் வளைத்த விநாயகர் ஆலயம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள பல 1,000 ஆண்டுகள் பழைமையான ஒரு விநாயகர் கோயில் ஆகும்.
அபூர்வமான வில் வளைத்த விநாயகர்
[தொகு]பயறணீசுவரர் ஆலய நுழைவாயிலில், மிகவும் அரிய சிறப்புடைய திருவுருவமாக “வில் வளைத்த விநாயகர்” பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தருகிறார். இந்த விநாயகர் உருவம், வில்லை வளைத்த தனித்துவமான நிலையால் அந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாக விளங்குகிறது.
வில் வளைத்த விநாயகர் தலபுராணம்
[தொகு]மகாபாரத காலத்தில், பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் அலைந்து கொண்டிருந்தபோது அவர்கள் முற்கபுரி என்று அழைக்கப்பட்ட இன்றைய உடையார்பாளையம் பகுதியில் சில காலம் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், பாண்டவர்கள் மிகவும் துன்புற்றனர்.
அப்போது அவர்கள் பக்தியுடன் விநாயகப் பெருமானை வேண்டினர். பாண்டவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட விநாயகர், அர்ஜூனனின் காண்டீப வில்லை வளைத்து, அந்த இடத்தில் ஒரு திருக்குளம் தோன்றச் செய்தார் என்று ஐதீகம் கூறுகிறது.
இதனால் அந்தத் திருக்குளம் இன்று வரை வில் வடிவில் அமைந்துள்ளது என்று நம்பப்படுகிறது. காண்டீப(வில்வடிவ) தீர்த்தம்.
அந்த தெய்வீக நிகழ்வை நினைவுகூரும் வகையில், பயறணீசுவரர் ஆலய நுழைவாயிலில் விநாயகப் பெருமான் வில் வளைத்த நிலையில் “வில் வளைத்த விநாயகர்” என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தருகிறார்.
அமைவிடம் & போக்குவரத்து வசதிகள்
[தொகு]திருச்சி - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில், ஜெயங்கொண்டத்திலிருந்து மேற்கு திசையில்(திருச்சி நெடுஞ்சாலையில்) 9 கி.மீ. தொலைவில் உள்ள உடையார்பாளையம் நகரில் அபூர்வமான வில் வளைத்த விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், துறையூர்,ஜெயங்கொண்டம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவரங்கம், பழநி, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களிலிருந்து உடையார்பாளையத்திற்கு நேரடி பேருந்து வசதி உண்டு. [1]