உடைமைச் சட்டம்
உடைமைச் சட்டம் (அ) சொத்துரிமைச் சட்டம் என்பது நிலம்சார் மற்றும் தனிமனித சொத்துரிமை மற்றும் குத்தகையை பொதுச் சட்ட அமைப்பின் வரையறைக்குட்பட்டு நிர்வகிக்கும் ஒரு சட்டப் பகுப்பாகும். சிவில் சட்ட அமைப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கிடையே வேறுபாடு வரையறுக்கப்பட்டுள்ளது. அசையும் சொத்து என்பது தனிப்பட்ட சொத்தைத் ஏறத்தாழ ஒத்துள்ளது, அசையா சொத்து என்பது ரியல் எஸ்டேட் அல்லது வீடு-மனை சொத்து, அதன் தொடர்பான உரிமைகள் பொறுப்புகளை ஒத்துள்ளது.
சொத்து குறித்த கருத்து, கருத்துரு அல்லது தத்துவமே சொத்துரிமை சட்டத்தின் அடிப்படையாக அமைகிறது. சில அதிகார எல்லைகளில் , அனைத்து சொத்துகளும் வழிவழியாக மன்னர் பரம்பறையால் உரிமை கொண்டாடப்பட்டு நிலக் குடிமுறை வாயிலாகவோ அல்லது விசுவாசத்தின் அடிப்படையிலான பிற நிலப்பிரபுத்துவ அமைப்புகளின் வாயிலாகவோ பிறர் பயன்பாட்டிற்கு பிரித்தளிக்கப்பட்டது.
நெப்போலிய சட்டத் தொகுப்பு முழுச்சொத்துரிமை கருத்தைச் சட்டமாக அறிமுகப்படுத்திய முதன்மையான நவீன கால அரசாங்கச் சட்டங்களில் ஒன்று. எனினும் தனிப்பட்ட சொத்துரிமைகளின் பாதுகாப்பு இடைக்கால இஸ்லாமிய சட்டமுறைமையிலும்,[1] நிலப்பிரபுத்துவ வடிவங்களில் இடைக்கால மற்றும் ஆரம்பகால நவீன இங்கிலாந்தின் பொது நீதிமன்றங்களிலும் காணப்பட்டன.
கோட்பாடு
[தொகு]சொத்து என்ற சொல் ஒரு நபருக்கு சொந்தமான - ஒரு புத்தகம் அல்லது ஒரு செல்போன் - ஒரு பொருளையும் (அல்லது பொருள்களையும்) அவற்றோடு அந்நபருக்கு உள்ள தொடர்பையும் குறிக்கும்.[2] சட்டத்தில், இந்த கருத்து இன்னும் ஒழுங்கான அமைப்பை ஏற்கிறது. பொருளின் தன்மை, நபர் மற்றும் பொருளுக்கு இடையிலான உறவு, பொருள் தொடர்பாக பல நபர்களுக்கும் இடையிலான உறவு மற்றும் தற்போதைய அரசியல் அமைப்பிற்குள் பொருளை எப்படிக் கருதுவது போன்றவைக் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள். சுருக்கமாக, சட்ட ரீதியில் சொத்து என்பது சில பொருள்கள் அல்லது விஷயங்களின் மேலுள்ள மக்களின் உரிமைகளைப் பரவலாகக் குறிப்பதாகும்.[3]
முன்னுரிமை
[தொகு]பல்வேறு தரப்பினர் தவறுதலாகவோ வஞ்சகமாகவோ ஒரே சொத்தின் மீது உரிமை கோரலாம். உதாரணமாக, சொத்துரிமையை உருவாக்கும் அல்லது கைமாற்றும் ஒருவர் அதற்கு உரித்தானவராயிருப்பினும், வேண்டுமென்றோ அலட்சியமாகவோ, முழுமையாக அல்லது பகுதிகளில் முரண்படுவோரிடையே சொத்துரிமை பாகங்களைப் பிரித்துருவாக்க நேரலாம். அவற்றால் பங்குதாரரிடையே எழும் பூசல்களை நீதிமன்றம் அவர்களின் முன்னுரிமைகளை ஆய்ந்துத் தீர்க்கும். "சொத்துரிமை கைமாற்றல்" என்ற சொற்கூறு, பொதுவாக ஒரு நபர் தன் சொத்துக்களை, தற்போதோ எதிர்காலத்திலோ, தானல்லாத ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட உயிருள்ள பிற நபர்களிடையேவோ, அல்லது, தான் மற்றும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிற உயிருள்ள நபர்ககளிடையேவோ கொண்டு சேர்ப்பதைக் குறிக்கும்.
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ Makdisi, John (2005). Islamic Property Law: Cases and Materials for Comparative Analysis with the Common Law. Carolina Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59460-110-0.
- ↑ Ann Marie Sullivan, Cultural Heritage & New Media: A Future for the Past, 15 J. MARSHALL REV. INTELL. PROP. L. 604 (2016) https://repository.jmls.edu/cgi/viewcontent.cgi?article=1392&context=ripl
- ↑ Badenhorst, PJ, Juanita M. Pienaar, and Hanri Mostert. Silberberg and Schoeman's The Law of Property. 5th Edition. Durban: LexisNexis/Butterworths, 2006, p. 9.
குறிப்புகள்
[தொகு]- AA Berle, 'Property, Production and Revolution' (1965) 65 Columbia Law Review 1
- AA Berle, 'Family Lawsuits Over Real Property' (2012) Los Angeles Article Review on Real Property 2 பரணிடப்பட்டது 2016-06-25 at the வந்தவழி இயந்திரம்
- Edwin Fruehwald, "A Biological Basis of Rights," 19 Southern California Interdisciplinary Law Journal 195 (2010).
- Jeremy Waldron (2004-09-06). "Property(Moveable and Immoveable Property)". Stanford Encyclopedia of Philosophy.