உள்ளடக்கத்துக்குச் செல்

உடைந்த பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடைந்த பாலம்
தாண்டுவது அடையாறு (ஆறு)
இடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அமைவு 13°00′45″N 80°16′33″E / 13.0125°N 80.2759°E / 13.0125; 80.2759

உடைந்த பாலம், சென்னை (Broken Bridge, Chennai) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள ஒரு பாலமாகும். 1967ஆம் ஆண்டில் பட்டினப்பாக்கத்திலிருந்து பெசன்ட் நகரின் எலியட்சு கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக அடையாறு முகத்துவாரத்தில் ஒற்றை வழி பாலம் கட்டப்பட்டது.[1] 1977ஆம் ஆண்டில், ஆற்றின் வலுவான நீரோட்டங்கள் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது சரிசெய்யப்படவில்லை.[2] இந்தப் பாலம் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு பிரபலமான இடமாக உள்ளது. ரிக்க்ஷாக்காரன், வாலி, ஆய்த எழுத்து போன்ற படங்களில் இப்பாலம் இடம்பெற்றுள்ளது.[1][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "A bridge to nowhere: How Chennai's Broken Bridge became a social landmark". News Minute. 5 March 2020. Retrieved 1 June 2024.
  2. "Activists, fisherfolk oppose Marina-Besant Nagar link plan". தி இந்து. 28 February 2020. https://www.thehindu.com/news/cities/chennai/activists-fisherfolk-oppose-marina-besant-nagar-link-plan/article30936950.ece.
  3. "Broken Bridge: A haven for mischief makers". IBN Live. May 2011. Archived from the original on 28 November 2012. Retrieved 14 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடைந்த_பாலம்&oldid=4474835" இலிருந்து மீள்விக்கப்பட்டது