உடும்பன் சுறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Atelomycterus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
உடும்பன் சுறா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Atelomycterus
இனம்: வார்ப்புரு:Taxonomy/AtelomycterusA. marmoratus
இருசொற் பெயரீடு
Atelomycterus marmoratus
(Anonymous [E. T. Bennett][சான்று தேவை], 1830)
உடும்பன் சுறா வாழும் பகுதி[2]
வேறு பெயர்கள்

Scyllium maculatum Gray, 1830
Scyllium marmoratum Anonymous [Bennett][சான்று தேவை], 1830
Scyllium pardus Temminck, 1838

உடும்பன் சுறா (Coral catshark) என்பது இசுகைலியோர்ஹினிடே குடும்பத்தைச் சேர்ந்த பூனைச் சுறா சிற்றினம் ஆகும். இது பாக்கித்தானிலிருந்து நியூ கினி வரை இந்தோ-மேற்கு பசிபிக் கடல் பகுதி முழுவதும் ஆழமற்ற பவளப் பாறை பகுதிகளில் காணப்படுகிறது. இவை 70 cm (28 அங்) நீளம் வரை வளரக்கூடியன. இவை குழாய் போன்ற மெல்லிய நீண்ட உடலையும், குறுகிய தலை மற்றும் வாலொடும், பின்னோக்கி வளைந்த இரண்டு முதுகு துடுப்புகளையும் இரண்டு பக்கத் துடுப்புகளையும் கொண்டுள்ளன. இதன் வெளிர் சாம்பல் உடலில் வெள்ளை நிற புள்ளிகளும், கருப்பு நிற புள்ளிகளும் காணப்படும். மேலும், வயது வந்த ஆண் சுறாக்களுக்கு தனித்துவமான நீண்ட மற்றும் மெல்லிய அணைப்புறுப்புகள் உள்ளன.

இரவாடியான இச்சுறாக்கள் பகலில் பவளப்பாறை இடுக்குகளில் மறைந்து வாழக்கூடியன. இவை பெரும்பாலும் முதுகெலும்பற்றவைகள் மற்றும் எலும்பு மீன்களை தீவிரமாக வேட்டையாடக்கூடியன. இதன் பாம்புபோன்ற மெல்லிய உடல் வடிவமானது பாறை இடுக்குளில் செல்ல வசதியாக உள்ளது. இதன் பெண் சுறாக்கள் ஒரு நேரத்தில் இரண்டு பணப்பை வடிவ முட்டை பொதியுறைகளை இடும். 4-6 மாதங்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சு பொரித்து வெளிவரும். மனிதர்களுக்கு பாதிப்பில்லாத இந்த சிறிய சுறாக்கள் பிடிக்கப்பட்டு மீன் காட்சியகத்திற்காக இனப்பெருக்கும் செய்யப்பட ஏற்றது. இது தனியார் மீன்காட்சியகங்களுக்கு ஏற்ற மிகவும் பொருத்தமான சுறா இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் மீன்பிடி செயல்பாடு மற்றும் இதன் வாழ்விடச் சீரழிவு போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. இதனால் இது பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைபட்டுத்தப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. White, W.T. (SSG Australia & Oceania Regional Workshop, March 2003) (2003). "Atelomycterus marmoratus". IUCN Red List of Threatened Species 2003: e.T41730A10550175. doi:10.2305/IUCN.UK.2003.RLTS.T41730A10550175.en. https://www.iucnredlist.org/species/41730/10550175. 
  2. Compagno, L.J.V.; Dando, M.; Fowler, S. (2005). Sharks of the World. Princeton University Press. பக். 210–211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-12072-0. https://archive.org/details/sharksofworld0000comp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடும்பன்_சுறா&oldid=3644901" இலிருந்து மீள்விக்கப்பட்டது