உடுப்பி (மக்களவை தொகுதி )

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடுப்பி மக்களவைத் தொகுதி (Udupi Lok Sabha constituency) இந்தியாவின் கர்நாடகாவில் இருந்த ஒரு மக்களவை தொகுதியாகும். 1957 ஆம் ஆண்டு இத்தொகுதி நடைமுறைக்கு வந்தது. 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிச் சீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உடுப்பி மக்களவைத் தொகுதி இல்லாமல் போனது.

வரலாறு[தொகு]

உடுப்பி மக்களவைத் தொகுதியின் முன்னாள் தொகுதியானது தெற்கு கனரா (வடக்கு) மக்களவைத் தொகுதியாகும். 1951 ஆம் ஆண்டு இது நடைமுறைக்கு வந்தது. 1956 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தால் இத்தொகுதி இல்லாமல் போனது. பழைய சென்னை மாநிலத்தின் தென் கன்னட மாவட்டம் 1956 இல் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்ட பிறகு, அந்த தொகுதி இல்லாமல் போய், உடுப்பி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள் [தொகு]

உடுப்பி மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு கர்நாடக சட்டமன்றப் பகுதிகளை உள்ளடக்கியது:[1]

  1. பந்த்வால் 
  2. சூரத்கல்[2]
  3. கௌப் 
  4. உடுப்பி
  5. பிரம்மவார் 
  6. குந்தாப்பூர் 
  7. பைந்தூர் 
  8. மூதபித்ரி 

பைந்தூர், குந்தாப்பூர், பிரம்மாவர், உடுப்பி மற்றும் கௌப் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் உடுப்பி மாவட்டத்திலும், மூடபித்ரி, சூரத்கல் மற்றும் பந்த்வால் சட்டப் பேரவைத் தொகுதிகள் தெற்கு கன்னட மாவட்டத்திலும் இருந்தன. 2008 இல் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்ட எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பிறகு, பைந்தூர் சிமோகா மக்களவைத் தொகுதிதியின் ஒரு பகுதியாக மாறியது. மேலும், பிரம்மவார் இல்லாமல் போனது.[3]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952: பார்க்க தெற்கு கனரா (வடக்கு) மக்களவைத் தொகுதி
1957 உல்லல் சிறீரீனிவாச மல்லையா இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 ஜே.எம்.லோபோ பிரபு சுதந்திராக் கட்சி
1971 பி. இரங்கநாத் செனாய் இந்திய தேசிய காங்கிரசு
1977 தோன்சே ஆனந்த் பை
1980 ஆசுக்கார் பெர்ணான்டசு
1984
1989
1991
1996
1998 ஐ.எம்.செயராம செட்டி பாரதிய ஜனதா கட்சி
1999 வினய் குமார் சொராகே இந்திய தேசிய காங்கிரசு
2004 மனோரமா மக்வாரா பாரதிய ஜனதா கட்சி
2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் : பார்க்க உடுப்பி-சிக்கமகளூர்

மேற்கோள்கள்[தொகு]