உச்ச அனுமதிக்கப்பட்ட கதிர் ஏற்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அயனியாக்கும் கதிர்வீச்சானது மருத்துவம், தொழில்துறை, ஆய்வு நிலையங்கள், பயிர்தொழில் என பல துறைகளிலும் பெருவாரியாக பயன்படுத்தப்படுகின்றது. இதுபோன்ற கதிர்கள் உடல்நலனைப் பாதிக்கின்றன என்பதால் பன்னாட்டு கதிரியல் காப்புக் கழகம் (ICRP ) அனுமதிக்கப்பட்ட உச்ச கதிர் ஏற்பளவினை பரிந்துரைத்துள்ளது. அதன்படி இன்று நாம் அறிந்த வரையில் எந்த அளவு கதிர்வீச்சினை பணியில் உள்ள ஒருவர் பெற்றால் அவருக்கோ அல்லது அவரது வழித் தோன்றலுக்கோ கதிர்வீச்சசினால் எந்த பாதிப்பும் ஏற்படாதோ அவ்வளவே, உச்ச அனுமதிக்கப்பட்ட கதிர் ஏற்பளவு (Maximum permissible Dose) ஆகும். இவ்வளவு 0.02 சீவர்ட் அல்லது 2 றெம் ஆகும். கதிர்வீச்சின் தீய விளைவுகள் புலப்பட, புலப்பட அளவு குறைக்கப்பட்டு வந்துள்ளது. 30 றெம் மிலிருந்து இன்று 2 றெம்மாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காலந்தோறும் MPD

1931 -50 றெம்|வருடம், 1936-ல் 30 றெம், 1948-ல் 15 றெம்,

1958-ல் 5 றெம், 1988-ல் 2 றெம்\வருடம் என்று குறைக்கப்பட்டது.