உசைன் தலத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகமது உசைன் தலத் (Mohammad Hussain Talat உருது: حسین طلعت ; பிறப்பு 12 பிப்ரவரி 1996) பாக்கித்தானியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் பாக்கித்தான் தேசிய அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டம் , பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2013 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் பாக்கித்தான் அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 1666 ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 1453 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி , பாக்கித்தான் அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார் . இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சார்பாக இவர் விளையாடினார்.

உள்ளூர் போட்டிகள்[தொகு]

பாக்கித்தான் துடுப்பாட்ட லீக்கில் இவர் குவெத்தா கிளாடியேட்ட்ர்ஸ் அணி சார்பாக விளையாடினார். அத்ந்ப் போட்டித் தொடரின் முக்கியமான ஒரு போட்டியில் இவர் ஐம்பது ஓட்டக்களை எடுத்து அணியினை ஒரு ஓட்டங்களில் வெற்றி பெற உதவினார்.[1] ஏப்ரல் 2018 இல் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான பாகிஸ்தான் கோப்பைக்கான பெடரல் ஏரியாஸ் அணியில் அவர் இடம் பெற்றார்.[2][3] போட்டியின் இறுதிப் போட்டியில் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.[4] 3 ஜூன் 2018 அன்று, குளோபல் இ20 கனடா போட்டியின் தொடக்க பதிப்பிற்கான வீரர்களின் வரைவு வீரர்கள் பட்டியலில் இவர் டொராண்டோ நேஷனல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.[5][6]

செப்டம்பர் 2019 இல், 2019–20 குவைத்-இ-அசாம் டிராபி போட்டிக்கான பலூசிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[7][8]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

2013 ஆம் ஆண்டில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2013 இல் நடைபெற்ற பிரசிடெண்ட் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார்.அக்டோபர் 23, ராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போர்ட் கசிம் அத்தாரிட்டி துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் 7 பந்துகைல் 1 ஓட்டம் எடுத்து முகமது தல்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 6 பந்துகளில் 1 ஓட்டங்களை எடுத்து முகமது சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சூயி நார்தர்ன் அணி 5 இலக்குகளில் வெற்றி பெற்றது.[9]

சர்வதேச துடுப்பாட்டம்[தொகு]

ஒருநாள்[தொகு]

2019 ஆம் ஆண்டில் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2019 இல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சனாவ்ரி 22, டர்பன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 14 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்து இவர் சாம்சி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது.[10]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசைன்_தலத்&oldid=2868256" இருந்து மீள்விக்கப்பட்டது