உசிலை
| உசிலை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | தாவரம்
|
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
| உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
| உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | A. amara
|
| இருசொற் பெயரீடு | |
| Albizia amara (Roxb.) Boiv. | |
| வேறு பெயர்கள் [1] | |
| |
உசிலை அல்லது உசிலி[2] (Albizia amara) என்பது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இது தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா முதல் சூடான் மற்றும் எத்தியோப்பியா வரை பரவியுள்ளது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]உசிலை மரம் நடுத்தர அளவிலான, இலையுதிர் மரமாகும், இது முட்கள் இல்லாமல் அகாசியாவை ஒத்திருக்கிறது.[3] மரத்தின் பட்டை சாம்பல் நிறத்தில் இருக்கும் பட்டைகளில் செதில்செதில்களாக இருக்கும்.[3] இலைகள் 15 ஜோடி பக்கவாட்டு கொத்துக்களாக இருக்கும். கொத்தில் உள்ள பக்கவாட்டு இலைகள் சிறியவை. அவை சுமார் 15-35 ஜோடிகளைக் கொண்டிருக்கும்.[3] பூக்கள் நீண்ட மெல்லிய ஊசிபோன்ற இதழ்களுடன் மேல் நோக்கி குஞ்சம்போன்றதாக காணப்படும்.[3] இதன் காய்கள் தட்டையாக சுமார் 20 செ.மீ நீளம் கொண்டவையாக இருக்கும்.[3] இலைகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் உதிர்ந்து ஏப்ரல் மாதத்தில் துளிர்க்கும்.[3] பூக்கள் மே மாதம் முழுவதும் இருக்கும். காய்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் முற்றும்.[3] முற்றிய காய்களை அசைத்தால் ஒலி எழுப்பும். இந்த மரத்தின் இலைகள் விட்டில் பூச்சிகளில் ஒன்றான அச்சேயா ஜனாட்டாவின் தோற்றுவளரிகளுக்கு உணவாகும்.[4]
சூழலியல்
[தொகு]உசிலை வறட்சியைத் தாங்கி வளரும். ஆப்பிரிக்காவில் இது முக்கியமாக மணல் நிறைந்த காடுகளில் வளர்கிறது.
இந்தியாவின் மத்திய தக்காண பீடபூமியின் வறண்ட இலையுதிர் காடுகளில் உசிலை, ஆச்சா ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் உயரமான மரங்களாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஆனைமலை, பழனி, ஏலக்காய் மலைகளிலும், தென்னிந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சவ்வாது மலைகளிலும், கோதாவரி பகுதியிலும் காணப்படுகிறது.[5]
பயன்கள்
[தொகு]
மருத்துவப் பயன்கள்
- இலைகளும், பூக்களும் புண்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன. இலை அக்கிக்கான சிகிச்சைக்க பயன்படுத்தப்படுகிறது.[6]
- இலைகளும், வேர்ப்பட்டையின் பசையும் தோல் நோய்கள் மற்றும் விஷக் கடி ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.[7]
- இதன் விதைகள் மூச்சுத்திணறல் மருந்தாகக் கருதப்படுகின்றன, மேலும் மூல நோய், வயிற்றுப்போக்கு, கொணோறியா சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.[7]
- இதன் பூக்கள் இருமல், புண்கள், பொடுகு, மலேரியா போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.[7]
- விதைகள் இலைகளின் மருந்து கலவைகள் புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டின் தன்மையைக் கொண்டுள்ளன.[7]
இதன் மரம் கட்டுமானத்திற்கும், தளபாடங்கள் செய்யவும், விறகாகவும் பயன்படுத்தப்படுகிறது. உசிலை மண் அரிப்பைக் கட்டுப்படுத்தவும், காற்றுத் தடையாகவும், நிழல் தரும் மரமாகவும் உபயன்படுகிறது. நகர்ப்புறங்களில் இது ஒரு அலங்கார மரமாகவும் உள்ளது. அசைபோடும் விலங்குகள் இதன் இலைகளை உண்ணும்.
காலனித்துவ காலத்தில், இந்தியாவில், இந்த மரங்கள் இரயில்வேயில் எரிபொருளாக பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Albizia amara (Roxb.)B.Boivin". Retrieved 18 November 2015.
- ↑ கலகலக்கும் சிலம்பின் மணியொலியும் பறையொலியும் | ஆயிரம் மலர்களே மலருங்கள் 9, இந்து தமிழ் திசை, 20 செப்டம்பர் 2025
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Krishen, Pradip (2006). Trees of Delhi: A Field Guide. Penguin Books India. ISBN 9780144000708.
- ↑ Sen-Sarma, P. K. (2012). Forest Entomology. APH Publishing. ISBN 9788131303320.
- ↑ Mani, M.S (December 2012). Ecology and Biogeography in India. Springer Science & Business Media. ISBN 9789401023313. Retrieved 24 October 2015.
- ↑ Khare, C.P. (22 April 2008). Indian Medicinal Plants: An Illustrated Dictionary. Springer Science & Business Media. pp. 29, 30. ISBN 9780387706375.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Albizia amara – A Potential Medicinal Plant: A Review". International Journal of Science and Research 5. https://www.ijsr.net/archive/v5i3/NOV161939.pdf.