உசான்-அனத்தோல் தெமார்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசான்-அனத்தோல் தெமார்சே
Eugène-Anatole Demarçay
பிறப்புசனவரி 1, 1852(1852-01-01)
பாரிஸ்
இறப்புமார்ச்சு 5, 1903(1903-03-05) (அகவை 51)
பாரிஸ்
தேசியம்பிரெஞ்சு
துறைவேதியியலாளர்
அறியப்படுவதுநிறமாலையியல்,
யூரோப்பியம் தனிமம் கண்டுபிடித்தமை

உசான்-அனத்தோல் தெமார்சே (பிரெஞ்சு மொழி: Eugène-Anatole Demarçay, 1 சனவரி 1852 – 5 மார்ச்சு 1903)[1] என்பவர் பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் சான்-பாப்டிசுட்டு தூமாசு என்ற வேதியியல் அறிஞரின் மேற்பார்வையில் கல்வி பயின்றார். ஒரு பரிசோதனையின் போது நிகழ்ந்த வெடிவிபத்தில் இவருடைய ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது.

நிறமாலையியல் துறையில் இவர் வல்லுநராகத் திகழ்ந்தார். 1896 ஆம் ஆண்டில், அப்போது புதியதாக கண்டறியப்பட்டிருந்த தனிமம் சமாரியத்தின் பண்புகளைப் பாதிக்கின்ற வேறு ஒரு தனிமம் அத்துடன் கலந்திருப்பதாக சந்தேகம் கொண்டார். இதன் விளைவாக 1901 ஆம் ஆண்டில் யூரோப்பியம் கண்டறியப்பட்டது. 1898 ஆம் ஆண்டில் இவர் தன்னுடைய அலைமாலைத் திறன்களை உபயோகித்து மேரி கியூரியின் ரேடியம் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. GeneaNet[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Asimov, Asimov's Biographical Encyclopedia of Science and Technology 2nd Revised edition

வெளியீடுகள்[தொகு]

  • Spectres électriques. Atlas ; Eugène Demarçay ; Paris : Gauthier-Villars, 1895
  • Sur les acides tétrique et oxytétrique et leurs homologues ; Eugène Demarçay ; Paris : Gauthier-Villars, 1880