உங்கள் சொந்த திரைப்படங்களின் திருவிழா

ஆள்கூறுகள்: 19°47′43″N 85°49′36″E / 19.795208°N 85.826805°E / 19.795208; 85.826805
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உங்கள் சொந்த திரைப்படங்களின் திருவிழா (BRING YOUR OWN FILM FESTIVEL) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில்  உள்ள கோவில் நகரமான பூரியின் கடற்கரைகளில் 2004 ம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டு வருடந்தோறும் நடைபெற்று வரும் திரைப்பட திருவிழாவாகும். அதன் சிறப்பம்சம் என்னவென்றால், அந்த திரைப்பட திரையிடல் விழாவிற்கு தகுதிச்சுற்று முறையோ, நடுவர் மன்றம் அமைத்து தரவரிசைப்படுத்துவதோ இல்லை, மாறாக இது சுயாதீன திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான இடமாகும். எந்தவொரு நபராக இருந்தாலும் திரைப்படம் எடுத்திருந்தால் இங்கே வந்து எளிய முறையில் பதிவு செய்து,தனது கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தலாம். 

இந்த விழா இந்திய திரைப்படத் தயாரிப்பு சமூகத்தில் கணிசமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. மட்டுமல்லாமல் திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு தரப்பினரிடையே பிரபலமாகிக்கொன்டும் வருகிறது.[1]

வரலாறு[தொகு]

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா) வைச் சார்ந்த சுசாந்த் மிஸ்ரா மற்றும் அவரது நண்பர்களால் [2] ஆரம்பிக்கப்பட்டது. இந்த திரைப்பட விழாவினை ஆரம்பிப்பதில் குர்பால் சிங், மறைந்த ஸ்வாகத் சென் மற்றும் பலர் பங்கெடுத்துள்ளனர்.]] வைச் சார்ந்த சுசாந்த் மிஸ்ரா மற்றும் அவரது நண்பர்களால் [2] ஆரம்பிக்கப்பட்டது. இந்த திரைப்பட விழாவினை ஆரம்பிப்பதில் குர்பால் சிங், மறைந்த ஸ்வாகத் சென் மற்றும் பலர் பங்கெடுத்துள்ளனர். ஆரம்பிக்கும் போதே, இத்திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களில் எந்தவொரு அதிகாரப்படிநிலையோ, விருதுகள், தரவரிசை போன்றவைகளோ இல்லை எனவும் நடுவர் மன்றங்கள் போன்றவைகளோ இல்லை என்பதாக தீர்மானித்து அதன்படியே நடத்தி வருகின்றனர்.[3]

திரையிடல்[தொகு]

இந்தத் திரைப்பட விழாவில், எந்தவொரு திரைப்படத் தயாரிப்பாளரும் தங்கள் திரைப்படத்தை இவ்விழாவிற்குக் கொண்டு வந்து திரையிடலாம். திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், நடனம், இலக்கியம் மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற பிற கலைத்துறைகளைச் சேர்ந்த கலைஞர்களும் பங்கேற்க்கலாம். அத்தோடு தங்கள் கலைப்படைப்புகளை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.[4]

இந்த திருவிழாவில் திரைப்படங்களை திரையிட பெயரளவிற்கு பதிவுக் கட்டணமாக ₹5,000 செலுத்தி பதிவு செய்து கொள்ளவும் அதுபோக திரையரங்க கட்டணமும் மட்டுமே செலுத்தினால் போதுமானது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 முதல் 25 வரை இந்த திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.[5]  

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramnarayan, Gowri (2004-02-20). "Puri's free-for-all film festival". தி இந்து. Archived from the original on 2004-04-11. பார்க்கப்பட்ட நாள் 2009-03-09.
  2. 2.0 2.1 Joshi, Namrata (2018-02-22). "BYOFF reinvents itself at 15" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/byoff-reinvents-itself-at-15/article22828793.ece. 
  3. "15th Bring Your Own Film Festival begins in Odisha's Puri | Sambad English" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-21. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  4. "dearcinem". Archived from the original on 2010-02-18.
  5. "Into The Wild: Bring Your Own Film Festival". IndiEarth - Connecting Worldwide Media To India's Artists (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2015-02-15. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]