உக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உக்ரா
Ukrah
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நதியா
அரசு
 • வகைகணக்கெடுப்பில் உள்ள ஊர்
 • நிர்வாகம்அரசாங்கப் பகுதி
 • சட்டப்பேரவை உறுப்பினர்நிலிமா நாக் (மல்லிக்)
பரப்பளவு
 • மொத்தம்4.78 km2 (1.85 sq mi)
ஏற்றம்12 m (39 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்13,548
 • அடர்த்தி2,800/km2 (7,300/sq mi)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்741257
மக்களவை (இந்தியா) தொகுதிபங்கௌன்
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிஅரிங்கட்டா
இணையதளம்nadia.nic.in

உக்ரா (Ukrah) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அமைந்துள்ள கல்யாணி உட்கோட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

22.944938° வடக்கு 88.660307° கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் உக்ரா நகரம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 12 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது. வடக்கில் சமுனா நதியால் சூழப்பட்ட இந்நகரம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து தோராயமாக 58 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மாசடையும் நிலத்தடிநீர்[தொகு]

ஆர்சனிக் வேதிப்பொருளால் நிலத்தடிநீர் மாசடைந்து வரும் நகரங்களுள் உக்ரா நகரமும் ஒன்றாகும்[2].

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உக்ரா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 13,548 ஆகும் இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 83.91% ஆகும்.கிராமப்புற மக்கள் தொகையில் ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9.6% அளவில் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ukrah Weather Forecast-2015". Accuweather.
  2. "Groundwater arsenic contamination in West Bengal-India (20 years study)". SOES. Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2011-03-25.
  3. "Ukrah Population - Nadia, West Bengal". Census-2011. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்ரா&oldid=3730871" இலிருந்து மீள்விக்கப்பட்டது