உக்காய் அனல் மின் நிலையம்

ஆள்கூறுகள்: 21°12′36.5″N 73°33′26.23″E / 21.210139°N 73.5572861°E / 21.210139; 73.5572861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உக்காய் அனல் மின் நிலையம்
Ukai Thermal Power Station
நாடுஇந்தியா
அமைவு21°12′36.5″N 73°33′26.23″E / 21.210139°N 73.5572861°E / 21.210139; 73.5572861
நிலைசெயல்பாட்டில்
இயங்கத் துவங்கிய தேதிஅலகு 1: மார்ச் 1976
அலகு 2: ஜீன் 1976
அலகு 3: ஜனவரி 1979
அலகு 4: செப்டம்பர் 1979
இயக்குபவர்குசராத்து மாநில மின்சார கழகம் லிமிடெட்
இணையதளம்
gsecl.in

இந்தியாவின் குசராத் மாநில மின்சாரக் கூட்டுத்தாபன லிமிடெட் நிறுவனத்தின் உக்காய் அனல் மின் நிலையம் 1,110 மெகாவாற் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமாகும். இது குசராத்தின் முக்கிய நிலக்கரி எரி மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றாகும். இந்த மின்நிலையம் தபதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மின் ஆலை[தொகு]

உக்காய் அனல் மின் நிலையம் தபதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள. இங்குள்ள நீர் மின்சார நிலையம் இப்பெயரிலே வழங்கப்படுகிறது.[1] 100 மெகாவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட இந்தியாவின் முதல் மின் நிலைய அலகு உக்காய் டிபிஎஸ் யூனிட் -1 ஆகும்.

நிறுவப்பட்ட திறன்[தொகு]

நிலை அலகு எண் நிறுவப்பட்ட திறன் ( மெகாவாட் ) செயல் பாட்டு தேதி நிலை
நிலை I 1 120 மார்ச் 1976 சேவையில் இருந்து ஓய்வு
நிலை I 2 120 ஜூன், 1976 சேவையில் இருந்து ஓய்வு
நிலை I 3 200 ஜனவரி 1979 இயக்கத்தில்
நிலை I 4 200 செப்டம்பர், 1979 இயக்கத்தில்
நிலை I 5 210 ஜனவரி 1985 இயக்கத்தில்
நிலை I 6 500 2013 இயக்கத்தில்

ஜி.எஸ்.இ.சி.எல் இல் 500 மெகாவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட உகாய் டி.பி.எஸ் யூனிட் -6-ன் முதல் அலகு ஆகும். [1]

போக்குவரத்து[தொகு]

இது மேற்கு இரயில்வேயின் ஜல்கான்-சூரத்து தொடருந்து பாதையில் உள்ளது. நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்கள் அதிக அளவு நிலக்கரியைப் பயன்படுத்துகின்றன.[2] எடுத்துக்காட்டாக, உக்காய் அனல் மின் நிலையம் 2006-07ஆம் ஆண்டில் 3,200,000 டன் நிலக்கரியைப் பயன்படுத்தியது.[3] இந்தியாவில் உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தில் சுமார் 80 சதவீதம் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்கள் மற்றும் நிலக்கரி போக்குவரத்து ஆகியவை இந்திய இரயில்வேயின் மொத்த சரக்கு வருவாயில் 42 சதவீதமாகும்.[4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]