ஈ. எஸ். ஐ. சி. மருத்துவக் கல்லூரி, பரீதாபாது
பின்னணியில் மருத்துவமனையுடன் கல்விக் கட்டிடம் | |
| குறிக்கோளுரை | நாங்கள் பராமரிக்கத் துணிகிறோம் |
|---|---|
| வகை | ESIC-இன் கீழ் செயல்படும் தன்னாட்சி மருத்துவக் கல்லூரி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு |
| சார்பு | பண்டித பகவத் தயாள் சர்மா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய மருத்துவ ஆணையம் |
| நிதிக் கொடை | 300 கோடி ரூபாய் |
| துறைத்தலைவர் | டாக்டர் அனில் குமார் பாண்டே |
| பட்ட மாணவர்கள் | ஆண்டுக்கு 150 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | ஆண்டுக்கு 102 (MD, MS, DM, MCh, DrNB உட்பட) |
| 10 | |
| அமைவிடம் | , இந்தியா |
| வளாகம் | நகர்ப்புறம் |
| இணையதளம் | mcfaridabad |
ஈ. எஸ். ஐ. சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பரீதாபாது (Employees' State Insurance Corporation Medical College and Hospital, Faridabad) என்பது அரியானா மாநிலத்தின் பரீதாபாது நகரில் அமைந்துள்ள அரசு இணைக்கல்வி மருத்துவக் கல்லூரி ஆகும்.
இது 2015 ஆம் ஆண்டு மாநிலக் காப்புறுதிக் கழகம் மூலமாக நிறுவப்பட்டது. இது, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு ஆகியவற்றின் கீழ் செயல்படும் மத்தியத் தன்னாட்சி அமைப்பாகும்.
இக்கல்லூரி பண்டித பகவத் தயாள் சர்மா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், ரோத்தக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது.
இக்கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ள 1,150 படுக்கைகள் கொண்ட பல்துறை மருத்துவமனை 2013 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 2014ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.[1] 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இவ்வளாகம், மாநிலக் காப்புறுதிக் கழகத் திட்டத்தில் காப்பீடு பெற்ற தொழிலாளர்களுக்கு முதன்மை மற்றும் மூன்றாம் நிலைச் சுகாதார சேவைகளை வழங்குகிறது.[2]
துறைகள்
[தொகு]- உடற்கூற்றியல்
- உடலியங்கியல்
- உயிர்வேதியியல்
- நோயியல்
- மருந்தியல்
- நுண்ணுயிரியல்
- தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சியல்
- நோய் எதிர்ப்பியல் இரத்தவியல் மற்றும் இரத்த மாற்று மருத்துவம்
- பொது உடல்நலவியல்
- காது, மூக்கு, தொண்டை மற்றும் தலை-கழுத்து அறுவைச் சிகிச்சை
- கண் மருத்துவம்
- பொது மருத்துவம்
- பொது அறுவைச் சிகிச்சை
- மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்
- குழந்தை மருத்துவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் மருத்துவம்
- முடவியல்
- சுவாச மருத்துவம்
- தோல் மருத்துவம், பால்வினை நோயியல் மற்றும் தொழுநோயியல்
- உளநல மருத்துவம்
- ஊடுகதிரியல்
- தலையீட்டு ஊடுகதிரியல்
- மயக்க மருத்துவம், வலி மற்றும் தீவிர சிகிச்சை
- அவசர மருத்துவம்
- உடற் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு
- பல் மருத்துவம்
- சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பாதை அறுவைச் சிகிச்சை
- இனப்பெருக்க மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை
- பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை
- மருத்துவ குடலியக்கம்
- அறுவை குடலியக்கம்
- மருத்துவப் புற்றுநோயியல்
- கதிர்வீச்சுப் புற்றுநோயியல்
- அறுவைச் சிகிச்சைப் புற்றுநோயியல்
- இதயவியல்
- சிறுநீரக மருத்துவம்
- மூட்டுவாதவியல்
- உட்சுரப்பியியல்
- நரம்பியல் அறுவைச் சிகிச்சை
- இதய-மார்பு மற்றும் இரத்த நாள அறுவைச் சிகிச்சை
- குழந்தைகள் அறுவைச் சிகிச்சை
- தொழில்சார் சிகிச்சை
படத்தொகுப்பு
[தொகு]- ESIC
- உள்புறத் தோற்றம்
- வெளிப்புறத் தோற்றம் 1
- கல்விக் கட்டிடம்
- வகுப்பறை
- வெளிப்புறத் தோற்றம் 2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Medical Colleges". uhsr.ac.in. ESIC Faridabad. Retrieved 8 March 2018.
- ↑ "ESIC Medical College & Hospital, NIT3, Faridabad". Archived from the original on 20 October 2019. Retrieved 20 October 2019.