ஈ. இராஜா
ஈ. இராஜா | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 மே 2021 | |
தொகுதி | சங்கரன்கோயில் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சங்கரன்கோயில் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
கல்வி | முதுகலை (பெரியார் பல்கலைக்கழகம்), சட்டம் (சேலம், மத்திய சட்டக் கல்லூரி) |
தொழில் | வழக்கறிஞர் |
ஈ. இராஜா (E. Raja) என்பவர் இந்திய அரசியல்வாதியும் 16ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக வேட்பாளர் வி. எம். இராஜலட்சுமியை தோற்கடித்தார்.[1] 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (தமிழ்நாடு) அமைச்சராக இராஜலட்சுமி பணியாற்றியுள்ளார். இந்தத் தொகுதியை திமுக 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியது.