உயிர்ப்பு ஞாயிறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈஸ்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
உயிர்ப்பு ஞாயிறு
The resurrection day.jpg
கடைபிடிப்போர் கிறித்தவர்
வகை Christian
முக்கியத்துவம் இயேசுவின் உயிர்ப்பு
கொண்டாட்டங்கள் திருப்பலி, குடும்ப உணவு, ஈஸ்டர் முட்டை தேடல், பரிசுப்பரிமாற்றம்
அனுசரிப்புகள் செபம், பாஸ்கா திருவிழிப்பு, திருப்பலி
2017 இல் நாள் ஏப்ரல் 16 (மேற்கில்)
ஏப்ரல் 16 (கிழக்கில்)
2018 இல் நாள் ஏப்ரல் 1 (மேற்கில்)
ஏப்ரல் 8 (கிழக்கில்)
2019 இல் நாள் ஏப்ரல் 21 (மேற்கில்)
ஏப்ரல் 28 (கிழக்கில்)
தொடர்புடையன திருநீற்றுப் புதன், தவக் காலம், குருத்து ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி,


உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா (கிரேக்க மொழி:Πάσχα:கடந்து போதல்) இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இது கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணையில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்ப்பு_ஞாயிறு&oldid=2145188" இருந்து மீள்விக்கப்பட்டது