ஈஷா குப்தா
அழகுப் போட்டி வாகையாளர் | |
![]() 2017 இல் ஒரு விழாவில் ஈஷா குப்தா | |
பிறப்பு | 28 நவம்பர் 1985[1][2] புது தில்லி, இந்தியா[3][4] |
---|---|
தொழில் | நடிகர் |
செயல் ஆண்டுகள் | 2007–தற்பொழுதுவரை |
பட்ட(ம்)ங்கள் | பெமினா மிஸ் இந்தியா 2017 |
Major competition(s) | பெமினா மிஸ் இந்தியா 2017 |
இஷா குப்தா (Esha Gupta) (பிறப்பு 28 நவம்பர் 1985) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகி மற்றும் பெமினா மிஸ் இந்தியா 2017 வாகையாளர் ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[5]
2007 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஈஷா பங்கு பெற்றார். அதில் இவர் மூன்றாவது இடம் பெற்றார். மேலும் மிஸ் இந்தியா சர்வதேச பட்டத்தை வென்றார். அதன் பின்னர் திரைப்பட நடிப்பிற்கான வாய்ப்புகளைப் பெற்றார். 2012 ஆம் ஆண்டில் ஜனாத் 2 என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத் துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்ததற்காக சிறப்பு அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அரசியல் நாடக படமான சக்ரவியூங் (2012) படத்தில் இவரது கதாப்பாத்திரத்திற்காக குப்தா புகழ் பெற்றார். ஆனால் நகைச்சுவைத் திரைப்படமான அம்சக்கல்ஸ் (2014) படத்தில் அவரது நடிப்பு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[சான்று தேவை] திகில் திரைப்படம் ராஸ் 3D (2012), சஸ்பென்ஸ் த்ரில்லர் உருஸ்தோம் (2016) மற்றும் திருட்டைப்பற்றிய திரைப்படமான பாத்சாஹோ (2017) ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை[தொகு]
ஈஷா குப்தா தில்லியில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ஆவார்.[6] இவருக்கு நேஹா என்ற சகோதரி உள்ளார்.[7]

தொழில்[தொகு]
2007 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியாவில் ஈஷா பங்கேற்றார்.

மகேசு பட்டின் திரைப்படமான ஜன்னத் 2 வில் இம்ரான் ஹஷ்மியுடன் முன்னணி பாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார்.[8] இப்படம் ₹430 மில்லியன் (US$5.4 மில்லியன்) சம்பாதித்து வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படவெற்றியின் மூலம் இவர் திரைப்படத்துறையில் பிரபலமடைந்தார்.

குறிப்புகள்[தொகு]
- ↑ "Birthday Special: Esha Gupta's Knockout Looks!". 28 November 2014. http://www.rediff.com/movies/report/birthday-special-esha-guptas-knockout-looks/20141128.htm. பார்த்த நாள்: 29 May 2016.
- ↑ "Esha Gupta's birthday wish: To do a 'masala 'film". 28 November 2012. http://www.dnaindia.com/entertainment/report-esha-gupta-s-birthday-wish-to-do-a-masala-film-1770865. பார்த்த நாள்: 29 May 2016.
- ↑ Hooli, Shekhar H (31 March 2015). "Esha Gupta to Compete with Anushka Shetty in 'Size Zero'". http://www.ibtimes.co.in/esha-gupta-compete-anushka-shetty-size-zero-627712. பார்த்த நாள்: 29 May 2016.
- ↑ "Birthday special: Things you may not know about Esha Gupta". http://www.mid-day.com/photos/birthday-special-things-you-may-not-know-about-esha-gupta/4218. பார்த்த நாள்: 29 May 2016.
- ↑ "Planet glamour Act II". Financialexpress.com. 13 August 2012. http://www.financialexpress.com/news/planet-glamour-act-ii/987462/0. பார்த்த நாள்: 2 November 2012.
- ↑ "Celeb Fitness Mantras: Esha Gupta". iDiva. http://idiva.com/news-health/celeb-fitness-mantras-esha-gupta/12861. பார்த்த நாள்: 14 December 2012.
- ↑ "Esha and Neha Gupta at the launch of Omega's 'Ladymatic' watch at Taj Palace, Delhi on November 23, 2011". Photogallery.indiatimes.com. http://photogallery.indiatimes.com/events/delhi/Omega-Ladymatic-launch/articleshow/10882814.cms. பார்த்த நாள்: 10 April 2013.
- ↑ "/ Emraan is USP of Jannat 2: Esha Gupta". Indiavision.com. 25 April 2012 இம் மூலத்தில் இருந்து 15 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120815073535/http://www.indiavision.com/news/article/entertainment/300018/emraan-is-usp-of-jannat-2-esha-gupta. பார்த்த நாள்: 13 August 2012.