ஈவினை
Appearance
ஈவினை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்கு வடக்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 6 கிமீ தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அச்செழுவுக்கான தூரம் பலாலி வீதி வழியே ஏறத்தாழ 14 கிமீ. இவ்வூரைச் சுற்றிலும், புன்னாலைக்கட்டுவன், அச்செழு, சிறுப்பிட்டி, வசாவிளான், நவக்கீரி ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.
நிறுவனங்கள்
[தொகு]இவ்வூரில் ஈவினை கற்பக விநாயகர் கோயில், ஈவினை கண்ணன் கோயில், ஈவினை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற இந்துக் கோயில்கள் உள்ளன. இவற்றுடன் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றும் இங்கே உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.