ஈழமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈழமாறன் (மே 5 1973 - நவம்பர் 11 1993) என விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்ட இவர் இறப்பின் போது அவ்வியக்க்கத்தின் கப்டன் தர உறுப்பினராக இருந்தார். இவர் 1993 ஆம் ஆண்டின் பூநகரித் தளம் மீதான தவளை நடவடிக்கையிற் கொல்லப்பட்டார்.

தொடக்க வாழ்வு[தொகு]

ஈழமாறன் சுப்பிரமணியம், நாகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகமே 5 1973 அன்று மாதகல், யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.இவருக்க்கு ஏழு இரத்த உறவுகள் இருந்தனர். ஆரம்ப கல்வியை மாதகல் "சென். ஜோசப் பாடசாலை"யில் பயின்ற பின்னர், 1984ஆம் ஆண்டு தெல்லிப்பழை 'மகாஜனாக் கல்லூரி' யில் தனது கல்வியைத் தொடர்ந்தார். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் திறமையாச் செயற்பட்டு கோட்ட மாவட்ட ரீதியில் பல பரிசில்களைப் பெற்று தனது படசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்தார்.

விடுதலைப் புலிகளில்[தொகு]

இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் இருந்தபோது 1990]] ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். பயிற்சிக் காலத்தின் போது திறமையாகச் செயற்பட்டு, அனைவரினதும் பாராட்டுக்களைடும் பெற்றான். பயிற்சி முடிந்த வேளை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற யாழ். கோட்டைச் சண்டையில் ஈடுபடும் வாய்ப்புக் கிட்டியது. திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக ஏழுபேருக்கு பெறுப்பாளனாக நியமிக்கப்பட்டு காரைநகர் சண்டைக்கு அனுப்பட்டார். அதன் பின்னர் மன்னார் பரப்புக் கடந்தான் நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர் கொள்ளும்படீ இவனது அணி பணிக்கப்பட்டது.அங்கு ஈழமாறன் காயமடைந்தார். காயம் மாறி முகாம் வந்தவேளை அவனுக்கு எல். எம். ஜி. கனரக ஆயுதம் வழங்கப்பட்டது. "மின்னல்" தாக்குதலில் ஏ.கே. எல்.எம்.ஜி. கனரக ஆயுதத்திற்கு உதவி இயக்குனராகச் செயற்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழமாறன்&oldid=1817966" இருந்து மீள்விக்கப்பட்டது