ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1939 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் என்னும் நூல். இது வித்துவசிரோமணி என அழைக்கப்பட்ட சி. கணேசையர் அவர்களால் ஆக்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டுவரை வாழ்ந்த இவர், சங்ககாலத்தைச் சேர்ந்த ஈழத்துப் புலவரான பூதந்தேவனார் முதல் தனக்கு முன் வாழ்ந்த ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தொகுத்து இந்த நூலை ஆக்கியுள்ளார்.