ஈர்ப்புப் புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈர்ப்புப் புலம் (Gravitational field) என்பது இரு நிறைகள் ஒரு குறிப்பிட்ட தொலைவினால் பிரிக்கப்பட்டுள்ளபோது, ஒன்று மற்றொன்றின் மீது ஈர்ப்பியல் விசையைச் செயல்படுத்துகின்றது. இதனைத் தொலைவியல் செயல் (action at a distance) என்கிறோம். அவை, ஒன்றையொன்று தொடாமல் இருப்பினும், இந்த இடைவினையாது நிகழும். இந்த இடைவினையைப் புலம் எனலாம். ஒரு புள்ளியில் வைக்கப்பட்ட துகள் அல்லது பொருள் அதனைச் சுற்றி ஏற்படுத்திக் கொள்ளும் இடத்தை ஈர்ப்புப் புலம் என்கிறோம். வேறொரு துகளை இப்புலத்தினுள் கொண்டு வந்தால், அது ஈர்ப்பியல் கவர்ச்சி விசையை ஏற்படுத்தும். ஒரு நிறையைச் சுற்றிலும் உள்ள இடத்தினுள் வேறொரு நிறையின் மீது ஈர்ப்பியல் விசை செயல்படுமாயின், அந்த இடத்தை ஈர்ப்புப் புலம் என வரையறுக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்ப்புப்_புலம்&oldid=1612389" இருந்து மீள்விக்கப்பட்டது