ஈரோடு வைராபாளையம் நீரேற்று நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈரோடு: ஈரோடு காவிரி ஆற்றில் மாநகராட்சி நீரேற்று நிலையம் அருகே தொழிற்சாலைகளின் கழிவு நீர் தேங்கி நிற்பதால் குடிநீர் மாசுபடிந்த நிலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களுக்கும் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் முக்கிய நீரேற்று நிலையமான வைராபாளையம் நீரேற்று நிலையம் மூலமாக பெரும்பாலான பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

வைராபாளையம் நீரேற்று நிலையம் அருகே பிச்சைக்காரன் ஓடையானது காவிரி ஆற்றில் கலக்கும் பகுதியாக இருப்பதால் இந்த ஓடையில் வரும் மாநகராட்சி சாக்கடை கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஆகியவை நேரடியாக நீரேற்று நிலையத்தில் கலக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசுபடிந்து வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டிருந்த தண்ணீர் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் 5ளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

வைராபாளையம் நீரேற்று நிலையம் அருகே பிச்சைக்காரன் ஓடையானது காவிரி ஆற்றில் கலக்கும் பகுதியாக இருப்பதால் இந்த ஓடையில் வரும் மாநகராட்சி சாக்கடை கழிவு நீர் மற்றும் தொழிற்சா00 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பெரும்பாலும் நீர்மின் அணைகளிலேயே தேக்கி வைக்கப்பட்டு விடுவதால் ஆற்றில் தண்ணீர் இன்றி காணப்படுகின்றது. இந்நிலையில் பிச்சைக்காரன் ஓடையில் கடந்த சில நாட்களாக வரும் தொழிற்சாலைகளின் கழிவு நீர் பச்சைக்கலரில் நீரேற்று நிலையம் அருகே தேங்கி நிற்கிறது.

இந்த தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வியோகித்து வருவதால் கடந்த மூன்று நாட்களாக மாநகர பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் கழிவு நிர் கலந்து வரவதாக கூறப்படுகிறது. மாசுகட்டுப்பாடு வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து பிச்சைக்காரன் ஓடையில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.