ஈரோடு வெண்டிபாளையம் கதவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈரோடு : ஈரோடு வெண்டிபாளையம் மின் உற்பத்தி நிலையம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு கூட முடிவடையாத நிலையில் தண்ணீரை தேக்கி வைக்கும் கதவணை ஷட்டரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தாததால் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வரும் நீரை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய காவிரி கிராஸ், நெரிஞ்சிபேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக் கோட்டை, பெரியஅக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2003ம் ஆண்டு காவிரி ஆற்றில் மின்உற்பத்திக்காக ஈரோடு வெண்டிபாளையம், பாசூர் பகுதியில் கதவணை அமைக்க திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2006ம் ஆண்டு பணி துவங்கப்பட்டது. வெண்டிபாளையம் பேரேஜில் 497 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பவானி கட்டளை கதவணை திட்டம் 2 கட்டுமான பணி துவங்கப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே 12 மீட்டர் அகலத்தில், 400 மீட்டர் நீளத்தில் 18 கதவணைகளுடன் இந்த பேரேஜ் கட்டி முடிக்கப்பட்டது. பேரேஜில் தண்ணீரை 9 மீட்டர் உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைத்து மின்உற்பத்தி செய்ய திட்டப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்தது. பணி அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி சென்னையில் இருந்து வீடியோகான்பிரன்சிங் மூலமாக முதல்வர் ஜெயலலிதா, மின் உற்பத்தியைத் துவங்கி வைத்தார்.

மின்உற்பத்திக்காக 2 யூனிட் அமைக்கப்பட்டு தலா 15 மெகாவாட் வீதம் 30 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இந்த நீரை தேக்கி வைத்து மின்உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேக்கப்பட்டுள்ள நீரின் மூலமாக மின்உற்பத்தி நடந்து வருகிறது.

வெண்டிபாளையம் பேரேஜில் தண்ணீரை தேக்க கட்டப்பட்டுள்ள கதவணையில் 15வது ஷட்டரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீரை தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்டுள்ள ஷெட்டரை பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்ட கட்டுமான பணியில் 5 ஆண்டு பராமரிக்க வேண்டும் என்பதால் பழுதுபார்க்கும் பணியில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். திறக்கப்பட்டு ஓராண்டு முடிவதற்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மற்ற ஷெட்டர்களும் தாங்குமா எனத் தெரியவில்லை.