உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோடு மணிக்கூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



ஈரோடு மணிக்கூண்டு என்பது தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாநகரின் மையப்பகுதியிலிருக்கும் ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். இந்தப் பகுதியானது நகரில் முன்னர் இருந்த கோட்டைக்கும் பழைய நகரப்பகுதியான பேட்டைக்கும் நடுவில் அமைந்துள்ளது.

2008ஆம் ஆண்டின் ஈரோடு மணிக்கூண்டு

வரலாறு

[தொகு]

1935ம் ஆண்டில், ஈரோடு நகராட்சியின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, நகரின் மைய வர்த்தகப்பகுதியில் செயல்பட்டு வந்த இரு பெருந்தெருக்களின் குறுக்குவெட்டுச் சந்திப்புப் பகுதியில், மணிக்கூண்டு, அப்போதைய கோவை கலெக்டராக இருந்து வந்த கோல்டுவொர்த் என்பவரால் அமைக்கப்பட்டது. இந்த மணிக்கூண்டு, மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நேரம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்துள்ளது.[1]

அமைவிடம்

[தொகு]

அந்த இரு பெருந்தெருக்களும் தற்போதைய வழக்கத்தில் நேதாஜி சாலை என்றும், ஆர்.கே.வி. சாலை என்றும் தலைவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

வடக்கில் ஆர்.கே.வி. சாலையின் முனையில் நகரின் அப்போதைய பேருந்து நிலையமும், தெற்கில் கச்சேரி சாலையில் நகரின் அப்போதைய அரசு மருத்துவமனை, நகரசபை, வட்ட அளவிலான நிர்வாக அலுவலகங்களும் இந்த மணிக்கூண்டினை மையப்படுத்தியே அமைந்திருந்தன.

இந்த மணிக்கூண்டின் வடக்கில் நேதாஜி காய்கறி சந்தையும் தெற்கில் அப்துல்கனி ஜவுளி சந்தையும் செயல்படுகிறது. இதன் மேற்குப்பகுதியில் கோட்டையும் கிழக்கில் பேட்டையும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tamizhvalai.com/archives/2043
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_மணிக்கூண்டு&oldid=3010931" இலிருந்து மீள்விக்கப்பட்டது