ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேதாஜி காய்கறி சந்தை
Netaji Market
px
இருப்பிடம்:ஈரோடு மணிக்கூண்டு
முகவரிஈரோடு
தமிழ்நாடு, இந்தியா.
அ.கு.எண் – 638 001
திறப்பு நாள்1983
உரிமையாளர்ஈரோடு மாநகராட்சி
கடைகள் எண்ணிக்கை806

நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாநகரின் மையப்பகுதியிலிருக்கும் ஒரு காய்கறிச் சந்தை ஆகும்.

வரலாறு[தொகு]

இன்றைக்கு உள்ளது போலவே ஈரோடு மாநகரம் சோழர் காலத்திலும் மிகப்பெரிய வணிக மையமாக விளங்கி வந்துள்ளது. தற்போது ஆர்.கே.வி. சாலையில் செயல்பட்டு வரும் தினசரி காய்கனி மார்க்கெட் 800 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இரண்டு பெரும் தெருக்களை சேர்த்து மார்க்கெட் செயல்பட்டு வந்ததால் ஆரம்பத்தில் பெருந்தெரு என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது காய், கனிகள் மட்டுமே விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஆரம்பத்தில் காய், கனிகள் உள்பட அனைத்து பொருட்களும் விற்கப்பட்டு வந்ததால் பொதுமார்க்கெட் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. தெருக்களில் வைத்துத் தான் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அந்த இருபெருந்தெருக்களும் தற்போதைய வழக்கத்தில் நேதாஜி சாலை என்றும், ஆர்.கே.வி. சாலை என்றும் தலைவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.

1935ம் ஆண்டில் அப்போதை ஈரோடு நகராட்சியின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது மார்க்கெட்டிற்கு அருகில் மணிக்கூண்டு அப்போதைய கோவை கலெக்டராக இருந்து வந்த கோல்டுவொர்த் என்பவரால் அமைக்கப்பட்டது. இந்த மணிக்கூண்டு மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நேரம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்துள்ளது. தற்போது ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த மார்க்கெட்டில் 806 கடைகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]